Connect with us
rajini

Cinema News

அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி! யார் செஞ்ச புண்ணியமோ? நடிக்கல – என்ன படம் தெரியுமா?

Ajith – Vijay:  தமிழ் சினிமாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் ஒரே நடிகர் யாரென்றால் அஜித்தான். அது என்னவோ ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் அஜித்தை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பில்லா படத்தில் அஜித் நடித்த பிறகு அஜித்துக்கு இருந்த க்ரேஸ் இன்னும் அதிகமாகவே உயர்ந்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.

சமீபகாலமாக ரஜினி விஜய் போட்டா போட்டி நடந்து வரும் நிலையில் கூட விஜய்க்கு எதிராக அஜித்தை புகழ்ந்து தள்ளும் படியான மீம்ஸ்களும் வந்து கொண்டிருந்தன. அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்று கூட ஒப்புக் கொள்வார்களே ஒழிய விஜயை ஏற்றுக் கொள்ள ரசிகர்களுக்கு மனம் இறங்கவில்லை.

இதையும் படிங்க: கதையின் மீது நம்பிக்கை இல்லாமல் தயாரிப்பாளரே கொடுத்த தொல்லை… ஒரே படத்தால் ஓஹோ புகழ் கொடுத்த விக்ரமன்..!

இந்த நிலையில் ரஜினி அஜித் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை இயக்குனர் லிங்குசாமி ஒரு பேட்டியின் போது பகிர்ந்தார். பல முறை லிங்குசாமிக்கு ரஜினியே வாய்ப்பு கொடுத்தும் லிங்குசாமியால் ரஜினியை வைத்துபடம் இயக்க முடியாமல் போனது.

அதை பற்றி வருத்தத்துடனும் லிங்குசாமி கூறினார். அப்படி ஒரு வாய்ப்பு வாசல் வரை வந்தும் வீட்டிற்குள் வராமல் போன கதையாக லிங்குசாமி தவறவிட்டிருக்கிறார். லிங்குசாமியும் ரஜினியும் பேசிக் கொண்டிருந்த போது இப்போது என்ன கதை கைவசம் வைத்திருக்கிறீர்கள்? என ரஜினி கேட்டாராம்.

இதையும் படிங்க: அரவிந்த்சாமியை ஏமாற்றிய தனுஷ்… எல்லாம் அவரு படம் ஓடுனதுனால வந்த மெதப்பு போல…

அந்த நேரம் அஜித்துக்காக ஜீ பட கதையைத்தான் வைத்திருந்தாராம். எங்கே கதையை சொல்லுங்கள் பார்ப்போம் என ரஜினி கேட்டாராம். கதையை கேட்டுவிட்டு இந்த கதையில் நான் நடித்தால் எப்படி இருக்கும்? என்றும் கேட்டிருக்கிறார். ஆனால் அந்தக் கதைப்படி ஹீரோ கல்லூரி மாணவன். அதனால் யோசிக்காமல் லிங்குசாமி நன்றாகவே இருக்காது சார் என பளிச்சென்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ரஜினி இல்ல, கதையை சற்று எனக்கேற்றவாறு மாற்றியமைத்தால் பண்ணலாமே என்று சொல்லியும் லிங்குசாமி நல்லாவே இருக்காது சார் என்று சொல்லி உங்களுக்காக அரசியல் சார்ந்த படமோ இல்லை சமூக கருத்துக்கள் சார்ந்த படமோ எடுக்க எனக்கு விருப்பமில்லை,

இதையும் படிங்க: சிம்பு செய்த வொர்க் அவுட்!. செம ஸ்டைலா மாறினது இப்படித்தான்.. அவரே வெளியிட்ட வீடியோ…

ஒரு சாதாரண மனிதனாக அவனுக்கு வில்லன் , எதிரி என யாரும் இருக்கக் கூடாது. சொல்லப்போனால் படையப்பா, முத்து போன்ற இந்தக் கதையில் தான் உங்களை நான் நடிக்க வைப்பேன் என்று சொல்லி வந்த வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறார் லிங்குசாமி.

google news
Continue Reading

More in Cinema News

To Top