Categories: Cinema News latest news

இன்னும் எவ்ளோ நாளோ! அதுவரைக்கும் ஆடட்டுமே – ரஜினியை பற்றி இதுவரைக்கும் யாரும் இப்படி சொன்னதில்லை

சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கியவர்தான் இயக்குனர் நந்து. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் அப்படியே டிராப் ஆனது. அதற்கான காரணத்தை நந்து கூறினார். அதாவது அந்தப் படத்திற்காக பிரஸ் மீட் வைத்த  போது சாப்பாடு போடவில்லையாம்.

ஒரு வேளை போட்டிருந்தால் அந்தப் படத்தை எப்படியாவது டேக் ஆஃப் பண்ணியிருக்கலாம் என்ற வித்தியாசமான காரணத்தை கூறினார். அதுமட்டுமில்லாமல் இன்றைய சினிமா காலகட்டத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நிலவி வருகிறது.

இதையும் படிங்க : ரஜினி செஞ்ச வேலை!.. மொத்தமும் குளோஸ்!. பாக்ஸ் ஆபிசிலிருந்து வெளியேறிய ஜெயிலர்!..

அதை பற்றியும் யாரும் எதிர்பார்க்காத ஒரு விளக்கத்தை நந்து கூறினார். யார் அதிக வசூல் எடுக்கிறார்கள் என்பதை தாண்டி இந்த 72 வயதில் நம்ம வீட்ல இருக்கிற பெரியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

ஆனால் ரஜினி இந்த வயசிலயும் மேடையில் அந்த அளவுக்கு கலகலப்பாக பேசி நடித்தும் காட்டுகிறார். யாருக்கு வரும் இந்த பக்குவம். இன்னும் கொஞ்ச நாள்தான். அவர் ஆயுள் எப்பொழுது என்று இறைவனுக்கு தெரியும். அதுவரைக்கும் சூப்பர் ஸ்டாராக இருக்கட்டும்.

nandhu

அவர் இறந்ததுக்கு பிறகு விஜய் வேண்டுமென்றால் சூப்பர் ஸ்டாராக இருக்கட்டும். எப்படியும் வயசானவர்கள் தான் முதலில் இறந்து விடுவார்கள். அதனால் ரஜினி அதுவரைக்கும் சூப்பர் ஸ்டாராக இருப்பதில் எந்த தவறும் இல்லை.

இதையும் படிங்க : சந்திரமுகி 2-வில் வேலையை காட்டிய லாரன்ஸ்!.. வெறுத்து போய் புலம்பும் பி.வாசு.. லக்கலக்க லக்க!..

50 வயதை நெருங்கும் விஜய்க்கு இன்னும் நாள்கள் இருக்கின்றது. ரஜினிக்கு பிறகு அவர் கொஞ்ச நாள் சூப்பர் ஸ்டாராக இருக்கட்டும். அவருக்கு பின் சிவகார்த்திகேயன், சிம்பு என அடுத்தடுத்த நடிகர்கள் வருவார்கள் என முற்றிலும் வித்தியாசமான விளக்கத்தை கொடுத்தார் நந்து.

Published by
Rohini