
Cinema History
கமல் நினைத்திருந்தால் நான் காலி… ஆனால் அவருக்கு ஈகோவே இல்லை.. ஓபனாக பேசிய ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருந்தாலும் கமல்-ரஜினி இடையே ஒரு நட்பு எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். இருவரின் முக்கியமான தருணங்களில் ஒருவரை மிஸ் செய்ததே இல்லை. அப்படி இருக்கும் போது ஒரு விழாவில் ரஜினி கமல் குறித்து ஓபனாக பேசிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
2009 செப்டம்பர் 28ந் தேதி கமலுக்கு பொன்விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துக்கொண்டு மேடையேறி பேச மைக்கை பிடிக்கிறார் ரஜினிகாந்த். நான் வளர்ந்து வந்த காலத்திலேயே கமல் பெரிய இடத்தில் நின்று இருந்தார். கோலிவுட்டின் முன்னணி நாயகனாக கமல் வலம் வந்தார்.
இதையும் படிங்க: கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்!
அவர் சொன்னால் எல்லாம் நடக்கும். அப்போது கூட என்னுடைய எந்த வாய்ப்பையுமே அவர் பிடுங்க நினைத்தது இல்லை. என்னை போட்டியாக நினைத்திருக்கலாம். ஆனால் பொறாமையாக நினைத்ததே இல்லை. அவர்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது நடுவில் நான் நைசாக நழுவி விடுவேன். ஒருமுறை என்னை பாலசந்தர் பிடித்து விட்டார். எங்க போற தம் அடிக்கவா எனக் கேட்கிறார். நானும் ஆமா சார் என்றேன்.
முதல உள்ளப்போ அங்க கமல் நடிச்சிட்டு இருப்பான். அதைப்போய் பாரு என அனுப்பி விடுகிறார். நானும் உள்ளே போய் பார்த்து மிரண்டு விட்டேன். இவர் நடிப்பில் 50 சதவீதம் நடித்தாலே நாம் பெரிய நடிகராகி விடலாமே என எனக்கு தோன்றியது. அவரை பார்த்து நடிப்பை கத்துக்கொண்டேன். எனக்கு அவர் அண்ணன் மாதிரி என்றார்.
இதையும் படிங்க : களமிறங்கும் இளைய தளபதி… ஜேசன் சஞ்சயின் இண்ட்ரோ வேற லெவலால இருக்கு!
மேலும், கலைத்தாயிடம் கேட்டேன். நானும் உன் மகன் தானே. கமலுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு நடிப்பு தருகிறாய் எனக் கேட்டேன். அதற்கு அந்த தாயோ ரஜினி உனக்கு நடிப்பு இந்த ஜென்மத்தில் தான் ஆசை வந்தது. கமல் ஒவ்வொரு ஜென்மத்திலும் நடிப்புடன் தொடர்ந்தே வருகிறார். அதான் அவரை என்னுள் வைத்திருக்கிறேன் என்றார் எனப்பேசி இருப்பார்.
நிகழ்ச்சி முடிந்த கையோடு கமலுக்கு ரஜினி ஒரு பரிசினையும் கொடுத்திருப்பார். அதில் கமலை கலைத்தாய் கையில் வைத்திருப்பது போலவும் மம்முட்டி, மோகன் லால், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோர் கைப்பிடித்து போலவும் இருக்கும் புகைப்படம் தான் அது. இந்த சம்பவங்களே இருவரின் நட்பினை எப்போதுமே பறைசாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.