Cinema History
பிரம்மாண்ட இயக்குனருக்கே மறந்து போன கதை… சரியாக எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்… அதாம்லே சூப்பர்ஸ்டார்…
Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய இயக்குனரை தேர்வு செய்வதில் ரொம்பவே சிரமப்படுவார். ஓடும் குதிரையில் பந்தயம் போடுவது தான் அவருக்கு சரியானதாகவே இத்தனை வருடம் அமைந்துவிட்டது. அப்படி அமைந்த படம் தான் முத்து. பலரிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிய கே.எஸ்.ரவிகுமாரை தேர்வு செய்ததில் சுவாரஸ்ய விஷயங்களை செய்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் தன்னுடைய இயக்குனரை தேர்வு செய்வதில் ரொம்பவே கவனமாக இருப்பாராம். அப்படி ஒரு மலையாள படத்தினை ரீமேக் செய்ய கவிதாலயா ரைட் வாங்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் கால்ஷூட் கொடுத்து இருந்தாலும் இயக்குனர் யார் என்று தேர்வு செய்யப்படாமலே இருந்தது.
இதையும் படிங்க: படம் சுமாருனாலும் ஹவுஸ்ஃபுல்! அதற்கு காரணம் இதுதான்.. சிங்கப்பூர் சலூன் குறித்து பிரபலம் சொன்ன தகவல்
அப்போது ஏவிஎம்மில் ரஜினிகாந்தும், விஜயகுமாரும் பேசிக்கொண்டு வர அங்கு கே.எஸ்.ரவிக்குமார் வந்து இருக்கிறார். அவரை பார்த்த விஜயக்குமார், ரஜினியிடம் காட்டி பெருமையாக சொன்னாராம். ரஜினியும் வாழ்த்துவிட்டு அவரின் படங்கள் குறித்தும் பாராட்டி பேசுகிறார். கே.எஸ்.ரவிக்குமாரும் சிரித்து கொண்டே நன்றி தெரிவித்து விட்டு நகர்ந்தாராம்.
அப்போது அவரின் படங்களை தொடர்ந்து பார்த்த ரஜினிகாந்துக்கு அந்த நேரத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம் ரொம்வே ஈர்த்து இருக்கிறதாம். இதனால் அந்த ரீமேக் படத்துக்கு இயக்குனராக ரவிக்குமாரை தேர்வு செய்து இருக்கிறார். படத்தின் வேலைகளும் தொடங்கியது.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அப்போது ரகுமானிடம் கதை சொல்ல கே.எஸ்.ரவிக்குமாருடன் ரஜினிகாந்தும் வருவதாக இருந்ததாம். ஆனால் ரஜினிகாந்த் வரவில்லை. ரகுமானை சந்தித்து கதை சொல்ல ரவிக்குமார் தயாராக இருந்தார். அப்போது கதவு தட்டும் சத்தம்.
இதையும் படிங்க: தேசிங்கு ராஜா 2 படத்தில் நடிக்கும் புகழ்… ஆனா அவர் கெட்டப்பை கேட்டா அசந்துடுவீங்க
எழுந்து போய் திறந்தால் ரஜினிகாந்த் நிற்கிறார். அவரும் வந்து உட்கார்ந்து இருவரும் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டு ரகுமானுக்கே ஆச்சரியமாகி விட்டதாம். ஒரு கட்டத்தில் ரவிக்குமார் கதை சொல்ல தயாராகி விடுகிறார். அதை உன்னிப்பாக ரஜினிகாந்தும் கவனித்து கொண்டு இருந்தாராம். ஏற்கனவே இரண்டு ஆளுமைகளுக்கு இடையில் கொஞ்சம் பதட்டமாகவே ரவிக்குமார் இருந்ததால் சில இடங்களை மறந்தாராம்.
அப்போது, சரியாக இதை விட்டு விட்டீர்கள். அந்த இடத்தினை சொல்லுங்கள் என ரவிக்குமார் தான் எடுத்து கொடுத்தாராம்.