தனுஷுக்காகத்தான் முதல் வரிசையில் 2 சீட் கேட்டாரா ரஜினி?!.. வீடியோவுக்கு பின்னாடி இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

Published on: January 24, 2024
rajini
---Advertisement---

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தின் மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். தனுஷை மகள் ஐஸ்வர்யா பிரிந்ததில் ரஜினிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.

ஏனெனில் ஏற்கனவே இளைய மகள் சௌந்தர்யாவும் இப்படித்தான் கணவரை பிடிக்காமல் மகனுடன் அப்பா வீட்டுக்கு வந்தார். சில வருடங்களில் வேறு ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். எனவே, ஐஸ்வர்யாவின் வாழ்க்கையும் இப்படி ஆகிவிடக்கூடாது என நினைத்து தனுஷ் – ஐஸ்வர்யாவை சேர்க்க சில முயற்சிகளை ரஜினி எடுத்தார்.

ஆனால், அது பலனளிக்கவில்லை. அதன்பின்னர்தான் ஐஸ்வர்யாவின் கவனம் சினிமா பக்கம் திரும்பியது. ஏற்கனவே 2 படங்களை இயக்கிய நிலையில் மீண்டும் லால்சலாம் என்கிற படத்தை இயக்கினார். அதில், ரஜினியும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் விழாவுக்கு ரஜினி தனது மனைவி லதாவுடன் சென்றிருந்தர்.

அப்போது முன் வரிசையில் ரஜினிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்திருந்த ரஜினி ஏற்பாட்டாளரிடம் 2 பேரை இங்கே உட்கார வைக்க வேண்டும் என கேட்பது போலவும், அதற்கு ஏற்பாட்டாளர் மறுப்பது போலவும் ஒரு வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அந்த விழாவுக்கு தனுஷ் தனது மகனுடன் சென்றிருந்தார். அவருக்கு பின் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி அங்கே வரும்போது முதல் வரிசையில் இருப்பவர்களை பார்த்து வணக்கம் செலுத்திவிட்டு போவார் என்பதால், பின் வரிசையில் இருக்கும் தனுஷையும், பேரனையும் தனக்கு அருகில் நிற்க வைக்க ஆசைப்பட்ட ரஜினி அவர்களுக்காகத்தான் 2 இடங்களை முன்வரிசையில் கேட்டார் என சொல்லப்படுகிறது.

ஆனால், பொறுப்பாளர் அதை நிராகரித்துவிட்டதால் ரஜினி அப்செட் ஆகி அமர்ந்தார் என சொல்லப்படுகிறது. இந்த தகவலையும் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.