வீட்டுக்குள் அரெஸ்ட்… நடு இரவில் ரவுண்ட் வரும் பயங்கர நாய்… ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் வீட்டில் இத்தனை விஷயமா?

by Akhilan |
வீட்டுக்குள் அரெஸ்ட்… நடு இரவில் ரவுண்ட் வரும் பயங்கர நாய்… ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் வீட்டில் இத்தனை விஷயமா?
X

Rajinikanth: ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.. அந்த சொத்தில் ரஜினிகாந்த் சில விஷயங்களை ரகசியமாக இன்னும் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ரஜினிக்கு சொந்தமான கேளம்பாக்கம் பங்களா குறித்து பிரபல திரை விமர்சகர் சபிதா ஜோசப் தெரிவித்து இருக்கிறார். ரஜினிகாந்தின் திரை வாழ்க்கை தொடங்கிய சமயம் வாங்கிய சொத்து அது. அப்போ தெலுங்கு நடிகர் மோகன் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வச்சு படம் பண்ணா பிஎம்டபுள்யூ காரா? போஸ்ட் போட்டு ஷாக் கொடுத்த இயக்குனர்

இருவரும் ஏகப்பட்ட வேலைகளை இளம் வயதில் அந்த பண்ணை வீட்டில் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில், நீச்சல் குளம் உட்பட அனைத்து பிரபல வசதிகளும் இருக்கின்றன. மேலும், பெரிய நாய் ஒன்று இருக்கிறதாம். அதற்கு பெயர் கங்காதரனாம். அதனை ரஜினிகாந்த், கங்கா என்று செல்லமாக அழைப்பாராம்.

ரஜினிகாந்துக்கு அந்த நாய் மீது கொள்ளை பிரியமாம். அடிக்கடி அதனுடன் விளையாடுவதை வாடிக்கையாக வைத்து இருப்பார். புது உடையுடன் வெளியில் வந்தால் நாய் அவர் மீது தாவி முழுமையாக அழுக்கு செய்துவிடுமாம். அது ஆசை தீரும் வரை விளையாடிவார்.

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கு எதிராக குழந்தை விஷயத்தில் முடிவெடுத்த ராதிகா… சிக்கிதவிக்க போகும் கோபி!…

பின்னர் சென்று வேறு உடை மாற்றி வெளியில் கிளம்புவாராம். இரவில் அந்த நாயை அவிழ்த்துவிட்டு விடுவார்களாம். முழு இரவும் வீட்டை சுற்றி காவல் காக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வீட்டில் வேலை செய்பவர்கள் நான்கு வருடத்துக்கு ஒருமுறை மாற்றி கொண்டே இருப்பாராம். ரஜினிகாந்தின் நேரடி கண்காணிப்பில் தான் இந்த வேலை ஆட்கள் தினமும் உள்ளனர்.

குறிப்பிட்ட வேலை ஆட்களை மாற்றும் போது அவர்களுக்கு பெரிய தொகையை ரஜினிகாந்த் செட்டில்மெண்ட்டாக கொடுத்து அனுப்புவார். அடுத்த புது ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த பங்களாவில் சில சீக்ரெட் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Next Story