தன்னை வாழ வைத்த அந்த 8 பேருக்காக தான் அருணாச்சலம் படம் … சிலிர்க்க வைத்த ரஜினிகாந்த்…

Rajinikanth: பல நடிகர்கள் தங்களது முதல் இயக்குனர்களையே அசிங்கப்படுத்தும் நன்றி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் தன்னை வளர்த்துவிட்டவர்களை வாழ வைக்க ஒரு படம் நடித்தார். அது தான் அருணாச்சலம். அப்படத்தில் தயாரிப்பாளர்கள் ஒன்று இல்லை 8 பேர் என்பது தான் ஆச்சரியமான விஷயமே. 

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அருணாச்சலம். இப்படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதினார். தேவா இசையமைத்து இருந்தார். 1997ம் ஆண்டு ரிலீஸான இப்படம் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் சக்ஸஸாக கருதப்பட்டது. 32 கோடி வரை வசூல் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

இப்படத்தின் தயாரிப்பாளர்களின் 8 பேர் தான் ஹைலைட்டே. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் முதல் படத்தை தயாரித்த கலாகேந்திரா பட நிறுவனத்தின் பி.ஆர்.கோவிந்தராஜ் – துரை இருவரும் ஒரு தயாரிப்பாளர்களாக உள்ளே வந்தனர். ரஜினியின் சில படங்களில் அயராது உழைத்த தயாரிப்பு நிர்வாகி கே.எஸ்.நாகராஜனுக்கும் பங்குதாரராக ஒரு இடம் கொடுத்தார்.

வள்ளி படத்தில் தனக்கு உதவியாக இருந்த கே.முரளி பிரசாத் ராவ். இவர் தன்னுடைய சகோதரர் மற்றும் தாயாருடன் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் போது ரஜினி ஆரம்பகாலங்களில் தங்கி இருந்த வீட்டில் தான் இருந்தார்களாம். அதனாலே அவரையும் படத்தின் பங்குதாரராக ரஜினி சேர்த்தார்.

ரஜினி நடித்த காளி படத்தினை தயாரித்த ஹேம்நாத். படம் ரிலீசாகி பெரும் வசூலை பெற்றாலும், படப்பிடிப்பின் போது குதிரைகள் தீயில் கருகியதாம். இதனால் அவருக்கு பெரிய அளவில் இழப்பும் ஏற்பட்டது. அதனால் அவரையும் படத்தின் பங்குதாரராக இணைத்தார். ரஜினிக்கு ரொம்பவே பிடித்தமான ஒரு நடிகர் வி.கே.ராமசாமி. அவர் வயது முதிர்ந்து செலவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளராக இணைத்து கொண்டார்.

இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

அருணாச்சலம் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்தும் இருப்பார். மன்னன் படத்தில் ரஜினியின் தாயாக நடித்த பழம்பெரும் நடிகை பண்டாரிபாய் ஒரு விபத்தில் தன்னுடைய கையை இழந்தார். அவருக்கு உதவும்பொருட்டு அவரை தன்னுடைய படத்தில் இணைத்தார் ரஜினிகாந்த். வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாக்கியதில் கலைஞானத்துக்கு அதிக பங்குண்டு.

அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் தன்னுடைய பங்குதாரர்கள் டீமில் அவரையும் இணைத்தார். இந்த ஏழு பேருமே ரஜினிக்கு ரொம்பவே நெருக்கமானவர்கள். ஆனால் சம்மந்தமே இல்லாத எட்டாவது ஆளாக இணைந்தவர் பதம்நாபன். அவர் எம்.ஜி.ஆரின் விசுவாசி. குடும்பமே கஷ்டப்பட்டாலும் எம்ஜிஆருக்காக உழைத்தவர்.

அவர் இறந்த ஒன்று இரண்டு மாதங்களிலேயே அவரும் உயிரிழந்தார். ஆறுபெண்களுடன் அவர் மனைவி தனியாக நிற்க இதை ரஜினி எப்படியோ தெரிந்துக்கொள்கிறார். அதை தொடர்ந்து அவரையும் இணைத்து எட்டு பேருடன் உருவாக்கிய நிறுவனத்தினை வைத்தே அருணாச்சலம் படத்தினை தயாரித்தார்.

இதையும் படிங்க: கமலுக்கு முன்பே பல கெட்டப்புகளை போட்ட எம்.ஜி.ஆர்!.. அதுவும் அதே டைட்டில்!. நடந்தது இதுதான்!..

Akhilan

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

42 minutes ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

1 hour ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

2 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

9 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

12 hours ago