Connect with us

Cinema News

தலைவர் யாருன்னு கூகுள் பேவில் தேடிப்பாரு!.. இணையத்தை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்.. வீடியோ பாருங்க!…

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண வந்த ரசிகர் ஒருவர், |தலைவரு யாருன்னு தெரியணும்னா கூகுள் பே போடுங்க| என  பேசியுள்ள பேச்சு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாக உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களுக்கு 1000 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அதற்கு மேல், 5000 முதல் 10,000 வரையில் டிக்கெட்டுகளுக்கு விலை வைத்து  ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே செம கலெக்‌ஷனை அள்ளி விட்டனர்.

ரஜினி ரசிகர்கள் அலப்பறை:

அலப்பறை கெளப்புவோம் என ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலில் வரிகள் இடம்பெற்றதோ இல்லையோ ரஜினிகாந்த் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவில் பட்டாசு வெடிப்பது, மேள தாளங்கள் முழங்குவது, ஆட்டம் போடுவது என ஒரே அலப்பறை செய்து விட்டனர்.

போதாக்குறைக்கு இசையமைப்பாளர் அனிருத் ஹுகும் பாடலுக்கு பாட்டுப் பாடி ஆட்டம் போட்டது எல்லாமே ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக மாறியது.

அர்னால்டு முதல் சச்சின் வரை:

இந்தியாவில் இல்லைங்க ஆசியாவிலேயே ரஜினிகாந்த் தான் சூப்பர்ஸ்டார் என்று பேசிய ரசிகர் ஒருவரின் வீடியோ தான் தற்போது ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவின் சிறப்பான சம்பவமாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் இந்தியாவில் இல்லைங்க.. ஆசியாவிலேயே தலைவரு தான் சூப்பர்ஸ்டார்.. அர்னால்டு முதல் அமிதாப் பச்சன் வரை கேட்டுப்பாருங்க, சச்சின் கிட்ட கேளுங்க, ஷேவாக் கிட்ட கேளுங்க.. தோனி கிட்ட கேளுங்க யாரு சூப்பர்ஸ்டாருன்னு சொல்வாங்க என்ற அவர் அதிரடியாக சொன்ன அந்தவொரு வார்த்தை தான் அவருடைய வீடியோ வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வரக் காரணமாக மாறிவிட்டது.

கூகுள் பே போடுங்க:

நான் சொல்றதுல்ல உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா கூகுள் பே போடுங்க.. கூகுள் பே போட்டுத் தேடுங்க.. கூகுள் பேல காட்டும் யாரு சூப்பர்ஸ்டார் என அந்த ரசிகர் ஒருமுறைக்கு பல முறை கூகுளில் தேடுங்கள் என்பதற்கு பதிலாக கூகுள் பேவில் தேடுங்கள் என பேசியது விஜய் ரசிகர்களை குபீரென சிரிக்க வைத்து விட்டது.

அந்த வீடியோவை வைரலாக்கி ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லாம் இப்படித்தான் மெண்டலாக திரிகின்றனர் என கலாய்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top