விஜய் டைரக்டர் மட்டுமல்ல அவர் பண்ற அதுவும் வேணும்… தலைவர்171ல் நடக்க இருக்கும் கூத்து….

Published on: February 3, 2024
---Advertisement---

Rajinikanth: சமீபகாலமாகவே விஜயின் டைரக்டர்களையே தன்னுடைய படங்களில் புக் செய்து வருகிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் ரஜினியின் 171வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தில் தற்போது ஒரு சுவாரஸ்ய சம்பவமும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

வேட்டையன் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. அப்படத்தினை முடித்த கையோடு மார்ச் மாதத்தில் இருந்து ரஜினிகாந்த் தலைவர்171 படத்தில் இணைய இருக்கிறார். அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் லோகேஷ் பிஸியாக இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதையும் படிங்க: விஜயகாந்த் ஆசை தான் போல!… இடத்துக்காக எதுவும் கேட்கவில்லை பிரேமா!… கலங்கிய தியாகு

முக்கியமாக லோகேஷ் படங்களில் இருந்து வேறுபட்ட ஒரு கதையாகவே 171 அமைய இருப்பதாக அவரே சமீபத்தில் சொல்லி இருந்தார். வித்தியாசமான கதை என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ், முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்போம். ரஜினி படத்தில் நடிக்க கசக்குமா?

இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை என்றே சொல்லி இருந்தனர். இதனால், படக்குழு குறித்த தகவல்கள் இனிமேல் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ரஜினியை இளமையாக காட்ட டி ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த இருப்பதாகவும் அதற்கான பணிகளில் படக்குழு இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யூட்யூப் பிரபலத்தினை எல்ஐசி படத்தில் இறக்கிய விக்னேஷ் சிவன்!… வெளியான வைரல் வீடியோ

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.