எல்லாரும் மாறிட்டாங்க... ரஜினி மட்டும்தான் பெண்டிங்!.. மனம் மாறுவாரா சூப்பர்ஸ்டார்?!...

by சிவா |
Vettaiyan
X

Vettaiyan

Rajinikanth: கோலிவுட் தற்போது இளம் நாயகர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இதுநாள்வரை ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன், கவின், ஹரிஷ் கல்யாண், மணிகண்டன் என அடுத்தகட்ட நடிகர்களின் வசம் சென்றுள்ளது.

முன்பு போல இல்லாமல் கதை தான் எப்போதும் கிங் என்பதை இந்த ஆண்டில் வெற்றிபெற்ற கோலிவுட் படங்கள் மீண்டுமொருமுறை நிரூபித்து இருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணங்களாக அமரன், லப்பர் பந்து படங்களை சொல்லலாம்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தின் சிறப்பு காட்சி!… ஆனா இங்க மட்டும் 7 மணிக்கு?!.. குஷியில் சூர்யா ரசிகர்கள்!…

திரையரங்கில் இரண்டு படங்களும் நல்ல வசூலை ஈட்டி இருக்கின்றன. குறிப்பாக அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. திரையரங்கில் வசூல் தாண்டவம் ஆடுவதால் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் கூட தள்ளிப்போய் இருக்கிறது.

இதற்கிடையில் அஜித் குமார் பாணியில் கமல்ஹாசன் தன்னுடைய பட்டங்களை துறந்து முன்னுதாரணம் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு செல்வதால் விஜய்யும் துப்பாக்கியை எடுத்து சிவகார்த்திகேயனிடம் கொடுத்து விட்டார். இவ்வாறு மேற்கண்ட மூன்று முன்னணி நடிகர்களும் இளம் நடிகர்களுக்கு பாதை விட்டு ஒதுங்கி இருக்கின்றனர்.

Ajith Vs Kamal

Ajith Vs Kamal

ஆனால் ரஜினி மட்டும் இதில் விதிவிலக்காக, கோலிவுட்டின் ஒரே சூப்பர்ஸ்டார் தான் மட்டும் தான் என்று இன்னும் படங்களில் டயலாக்குகள், பாடல்கள் வைத்து வருகிறார். அவரின் இந்த நடவடிக்கைகள் தீவிர ரசிகர்களையே இதை கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லது என்று சொல்ல வைத்துள்ளன.

அதோடு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அமிதாப்பச்சன் போல வயதுக்கேற்ற வேடங்களை அவர் ஏற்று நடிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: டேய் முட்டாள்!.. ரசிகரை திட்டிய சூர்யாவின் பவுன்சர்ஸ்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர் புரோ!..

Next Story