ரஜினி கொடுத்த காசை நயன்தாரா படத்தில் போட்டு போண்டி ஆன நபர்!.. அப்செட்டில் சூப்பர்ஸ்டார்!..
திரையுலகை பொறுத்தவரை ஒரு பிரபலத்திடம் பணிபுரிபவர்கள் பல வருடங்கள் உடன் இருக்க மாட்டார்கள். எவ்வளவு நம்பிக்கையை பெற்றிருந்தாலும் சில வருடங்கள் மட்டுமே தாக்குபிடிப்பார்கள். மேனேஜர், உதவியாளர், பி.ஆர்.ஓ இவர்கள் எல்லாருமே மாறிக்கொண்டே இருப்பார்கள்.
அரிதாக சில பேர் சில நடிகர்களிடம் அதிக வருடங்கள் தாக்குபிடிப்பார்கள். அது அவர்கள் அந்த பிரபலத்திடம் பெறும் நம்பிக்கையை பொறுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பல வருடங்கள் எல்லாமுமாக இருந்தவர் சஞ்சய். அவர் இல்லாமல் ரஜினி வீட்டில் அணுவும் அசையாது என சொல்லுமளவுக்கு இருந்தார்.
இதையும் படிங்க: நீயா? நானா? வா.. மோதிப் பார்ப்போம்!.. சம்பளத்தை ஏத்துவதில் சண்டை போடும் லோகேஷ் – அட்லீ!..
ரஜினி வெளியே வந்து ரசிகர்களுக்கு கை காட்டினாலும் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருப்பார். ரஜினியின் குடும்பத்திற்கு சஞ்சய் எந்த அளவுக்கு நெருக்கம் எனில் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது என மருத்துவர்கள் கூறிய போது ரஜினிக்கு ஒரு சிறுநீரகத்தை கொடுத்தது இந்த சஞ்சய்தான்.
எனவே, அவர் மீது ரஜினி குடும்பத்தினருக்கு அன்பு உண்டு. ஆனால், என்ன காரணமோ சில மாதங்களுக்கு முன்பு அவர் ரஜினியை விட்டு வெளியேறினார். சில அதிருப்திகளால் அவரே வெளியேறியதாகவும், ரஜினி குடும்பம் அவரை வெளியேற்றி விட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. இதில் எதில் உண்மை என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: இரண்டு நாளுக்கு தான் இந்த பில்டப்பா?.. அஜித் படக்குழுவால் கடுப்பான ரசிகர்கள்..
ஆனால், ரஜினிக்கு அவர் மீது நல்ல அன்பும், பாசமும் உண்டு. எனவே, அவரை அழைத்து ஒரு பெரிய தொகையை கொடுத்து இதை வைத்து எதாவது தொழில் செய்து செட்டில் ஆகுங்கள் என சொல்லி இருக்கிறார். ஆனால், ரஜினி சொன்னதை கேட்காமல், நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த ‘அன்னப்பூரணி’ படத்தின் தயாரிப்பில் சஞ்சய் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்.
ஆனால், அந்த படம் ஊத்திக்கொண்டது. எனவே, சஞ்சய்க்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்னரும் திருந்தாத அவர் இப்போது யோகிபாபுவை ஹீரோவாக போட்டு ஒரு படத்தை எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். இதைக்கேள்விப்பட்ட ரஜினி அப்செட் ஆகியிருக்கிறாராம்.