Categories: latest news

கடைசி வரைக்கும் அந்த தாஜ்மகாலை காட்டலையேப்பா!.. அந்த வசனத்துக்கே எண்ட் கார்டு வச்ச சூப்பர் ஸ்டார்!

சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் மெரினா பீச்சை சுற்றி பார்த்து விட்டு திரும்பும் பரவை முனியம்மா கடைசி வரை அந்த தாஜ்மகாலை கண்ணுலையே காட்டலையேப்பா என சொல்வார். அந்த வசனத்தை இனிமேல் சென்னைக்கு வரும் யாரும் சொல்ல முடியாத அளவுக்கு ரஜினிகாந்த் ஒரு சூப்பரான வேலையை பார்த்து விட்டாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கலைஞரின் நினைவு மண்டபம் சென்னை மெரினா கடற்கரை அருகே கட்டப்பட்டு வந்த நிலையில், இன்று திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: யோகா, தியானம்லாம் பண்ணியும் கோபம் குறையலையேப்பா! சிவகுமாரை பங்கமா கலாய்த்த பிரபலம்!..

ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு செல்லும் போது, அவர் காரை விட்டு இறங்கியதுமே ஓடோடி வந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதே போல ரஜினிகாந்த் எங்கேப்பா காணோம் என ஸ்டாலின் அவரை தேடி அலைந்த காட்சிகளும் அவருடன் ரஜினிகாந்த் அருகே அமர்ந்து உரையாடிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

கலைஞர் நினைவு மண்டப திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது இது கலைஞர் நினைவு மண்டபம் என சொல்வதை விட கலைஞரோட தாஜ்மகால்னு சொல்லலாம் என பூரித்துப் போய் ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

இதையும் படிங்க: அய்யய்யோ ஆளவிடுங்க!.. எனக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் சம்மந்தமே இல்லை!.. அலறியடித்த அமீர்!

சமீபத்தில் சசிகலாவின் இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த் வீட்டை கோயில் மாதிரி கட்டியிருக்கீங்கன்னு ரஜினிகாந்த் பாராட்டினார். அரசியலில் இருந்து ரஜினிகாந்த் விலகினாலும் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்தை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வருகின்றனர். ரஜினிகாந்தும் தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்துன்னு அனைவருக்கும் நான் பொதுவானவன் என மாறி உள்ளார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago