Cinema History
நான் மட்டும் என்ன ஒசத்தியா? தலையணை இல்லாத தூக்கம்… ஓடையில் குளியல்.. ரஜினியின் எளிமை!
ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்றால் கூட அவரின் எளிமை குறித்து கிட்டத்தட்ட கோலிவுட்டே அறிந்து தான் வைத்திருக்கிறார். இதில் நிறைய சம்பவங்களை கேட்கும் போது நமக்கே ஆச்சரியம் வரும் அளவுக்கு இருக்கும். இப்படி ஒரு சம்பவம் எஸ்.பி.முத்துராமன் படப்பிடிப்பில் நடந்து இருக்கிறது.
போக்கிரிராஜா படப்பிடிப்பு சித்தூரில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் நடக்க இருக்கிறது. பாட்டை புலியூர் சரோஜா கோரியோ செய்ய ரெடியாக இருக்கிறார். ஒரு பக்கம் ரஜினி ரெடி, பின்னணி நடனம் ஆடுபவர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் டேப் ஓடவில்லை. பாடல் ரெக்கார்ட் ஆகி இருந்தது சரியாக இருந்தாலும் பாடல் ஓடவில்லை.
இதையும் படிங்க: கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்!
என்ன செய்தாலும் சரியாக வில்லை. தற்போது சென்னையில் இருந்து தான் கொண்டு வர வேண்டும். போக வர 8 மணி நேரத்தினை தாண்டும் என்பதால் அந்த நாளில் படப்பிடிப்பினை நடத்த முடியாது என்ற நிலை உருவாகிறது. உடனே முத்துராமன் ரஜினியை சென்னை கிளம்ப சொல்கிறார்.
ரஜினி அப்போ நீங்களாம் என அவரிடம் கேட்க இதோ இருக்க கூர வீட்டில புலியூர் சரோஜா அவர் குழுவுடன் இருந்து கொள்வார். மற்றவர்கள் பக்கத்தில் இருக்கும் வீட்டில் தங்கி விடுவார்கள். நான் கேமராமேன் எல்லாம் மாடியில் படுத்துகொள்வோம் எனக் கூறுகிறார்.
இதைக்கேட்ட ரஜினி அப்போ நான் மட்டும் என்ன ஒசத்தியா? நானும் உங்களுடனே இருக்கிறேன் எனக் கேட்கிறார். அவரிடம் எவ்வளவு சொல்லியும் மறுத்து விடுகிறார் ரஜினி. முத்துராமனுடன் மாடியில் தலையணைக்கூட வைத்துக் கொள்ளாமல் தூங்குகிறார்.
இதையும் படிங்க: கமல் நினைத்திருந்தால் நான் காலி… ஆனால் அவருக்கு ஈகோவே இல்லை.. ஓபனாக பேசிய ரஜினிகாந்த்
காலையில் எழுந்து அங்கிருந்த ஓடையில் குளித்து விட்டு வேப்பங்குச்சியில் பல் விளக்கிவிட்டு சின்ன கடையில் இட்லி சாப்பிட்டாராம். அப்போது முத்துராமனிடம் இந்த வாழ்க்கை வாழ்ந்து பல நாட்களாகி விட்டது. இந்த சந்தோஷத்தினை என்னை அனுபவிக்க விடாமல் சென்னைக்கு அனுப்ப பார்த்தீங்களே எனக் கூறி இருக்கிறார்.
இந்த விஷயத்தினை பல பேட்டியில் எஸ்.பி.எம் சொல்லி சந்தோஷப்பட்டு இருக்கிறார். இத்தனை எளிமை இருந்ததால் அவர் பெரிய இடத்தினை பிடித்து இருக்கிறார். பல இளம் நாயகர்கள் ரஜினியிடம் இருந்து நிறைய கத்துக்கொள்ள வேண்டும் என்பதே உண்மை.