Connect with us

Cinema News

யார் கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமி தான்!.. லால் சலாம் டிரெய்லர் ஃபுல்லா ஃபயரா இருக்கே!..

”எந்த ஊர் சாமியா இருந்தாலும்.. யார் கும்பிடுற சாமியா இருந்தாலும்.. சாமி சாமி தான்” என தன்யாவை பேச வைத்திருக்கும் காட்சியுடன் லால் சலாம் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு லால் சலாம் டிரெய்லர் ரிலீஸ் ஆகும் என நிகழ்ச்சியை எல்லாம் படக்குழு ஏற்பாடு செய்தது.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிகழ்ச்சியிலேயே டிரெய்லரை வெளியிடவில்லை. அதன் பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், 7 மணிக்கு டிரெய்லர் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் கடுப்பாகி ஏகப்பட்ட மீம்களை போட ஆரம்பித்தனர்.

இதையும் படிங்க: இந்த சீனை ஏன்யா தூக்குனீங்க!.. வடக்குப்பட்டி ராமசாமி டெலிட்டட் சீன் வைரலாகுது.. நிழல்கள் ரவி மாஸ்!

கடைசியாக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்று முழுக்க சிவராத்திரி தான் என ட்ரோல் செய்யத் தொடங்கினர். ஆனால், ஒருவழியாக 9.30 மணிக்கு மேல் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை ரஜினி படமாகவே காட்டி வந்த நிலையில், ஒரு வழியாக விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமைய்யா, தன்யா பாலகிருஷ்ணன், அனந்திகா உள்ளிட்ட அனைவரையும் காட்டியபடி டிரெய்லரை கட் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: செல்பி புள்ளையாகவே மாறிய விஜய்!.. ரசிகர்களுடன் எடுத்த அடுத்த வீடியோ.. இது செம வைரல்…

நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லையா என்கிற கேள்விக்கு, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கு, அங்கே உள்ள சில ஆட்கள் மீது நம்பிக்கை இல்லை என ரஜினிகாந்த் பேசும் வசனத்துடன் என்ட்ரி கொடுக்கிறார் தேர் திருவிழா, திருவிழா நடக்கும் 2 நாட்கள் தான் சொந்த பந்தத்தை பார்க்க முடிகிறது என செந்தில் ஃபீல் பண்ணும் காட்சி என டிரெய்லர் நிறைவாக உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9ம் தேதி மிரட்டும் என்றே தெரிகிறது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top