திடீரென்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த்... காரணத்தை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க...

இன்று காலை திடீரென ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் ஹாஸ்டேக்குடன் ட்ரெண்ட் ஆனது. அது எதற்காக என்றால், எந்திரன் படத்திற்கு பிறகு கடந்த 2011-ஆம் ஆண்டு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ரஜினிகாந்த்.
அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது உயிருக்கு மிகவும் போராடி வந்தார். அவர் மீண்டும் நலமுடன் திரும்ப ரசிகர்கள் கோவிலுக்கு சென்று அழகு குத்துவது, காவடி எடுப்பது என பல கோவில்களுக்கு சென்று பல பிரார்த்தனைகள் செய்தனர்.
இதையும் படியுங்களேன்- உங்களுக்கு மட்டும் தான் லோகேஷ் சினிமா உலகமா? இதோ ரெடியாகிவிட்டது பா.ரஞ்சித் ‘சார்பாட்டா’ உலகம்…
அதன் பின், இதே தினத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நலமுடன் சிகிச்சை அனைத்தும் முடிவடைந்து வீடு திரும்பினார். அப்போது ரசிகர்களை சந்தித்த ரஜினி தனது ரசிகர்கள் செய்த பிரார்த்தனை தான் தன்னை உயிரோடு வர செய்தது எனவும் தெரிவித்திருந்தார்.
இன்று அதே தினம் என்பதால் ரசிகர்கள் அப்போது ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தையும், ரஜினியின் பெயரையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அது மட்டுமின்றி, ரஜினி நடிக்க உள்ள ஜெயலர் படத்தின் படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதால் காலையிலே ரஜினி ட்ரெண்டிங்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.