ரஜினியின் 173-வது திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் சுந்தர்.சி. அதன்பின் இந்த படத்தை இயக்குனருக்காக பலரையும் தேடினார்கள்.
பல இயக்குனர்கள் ரஜினியை சந்தித்து கதை சொன்னார்கள் அதில் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்ததாகவும், அவர்தான் புதிய படத்தை இயக்குகிறார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவரத்திதான் ரஜினி படத்தை இயக்குகிறார் என அறிவித்தார்கள்.
சிபி சக்கரவர்த்தி இதுவரை ஒரே ஒரு படத்தைதான் இயக்கியிருக்கிறார். அப்படி அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டான் திரைப்படம் கூட கிரின்சின் உச்சம்தான். அப்படி இருந்தும் எப்படி அவரை ரஜினி எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை. இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.
எனவே, ரஜினியும், சிபியும் இணையும் திரைப்படம் என்ன மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்காக ரஜினி வந்தார்.
அப்போது புதிய படம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘இது ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.. மார்ச் மாதம் ஷூட்டிங் துவங்கும்’ என தெரிவித்தார்.