விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பாக நடைபெற்றது. இதில், உலக நாயகன் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ், தேவயாணி, ரேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
வழக்கம் போல நடிகர் அஜித்தும் வடிவேலுவும் விஜயகாந்தின் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வரவே கூடாது என தீர்மானத்தில் இருப்பது போல நேற்று நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்திற்கும் அவர்கள் இருவரும் வரவில்லை.
இதையும் படிங்க: லைக்காவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் அஜித்! ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் நடக்கும் களோபரம்
நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்று விஜயகாந்த் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆனால், இந்த நிகழ்ச்சியை நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் புறக்கணித்து இருப்பது நடிகர் சங்கம் இடையே நடிகர்களுக்கு இருக்கும் மோதலையே காட்டுவதாக தெரிகிறது.
நடிகர் சங்கம் இரு பிரிவுகளாக பிளவுப்பட்டு இருப்பதாகவும் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் முக்கிய பொறுப்பில் இருந்தும் பல ஆண்டுகளாக இன்னமும் நடிகர் சங்க கட்டட வேலையை ஆரம்பிக்காமல் இருந்து வருவதாக தேவயாணி உள்ளிட்டோர் நினைவேந்தல் கூட்டத்திலேயே அதிரடியாக பேசி விட்டனர். சீக்கிரம் கட்டுங்கன்னு கேப்டன் விஜயகாந்தே சொல்றாருப்பா என தேவயாணி ஒரே போடாக போட்டார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி!.. கமல், விக்ரம், கார்த்தி பங்கேற்பு….
நடிகை ரேகா பேசும் போது வராத நடிகர்கள் பற்றி ஏன் கேட்கிறீங்க, வந்தவர்களை முதலில் கவனியுங்கள் என பேசிய அவர், விஜயகாந்த் தனது ஹெல்த்தை கவனிக்காத நிலையில் தான் அவர் உயிரிழந்தார் என்றும் அனைவரும் ஹெல்த்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என பேசிச் சென்றார்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…