Connect with us
kamal

Cinema News

விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி!.. கமல், விக்ரம், கார்த்தி பங்கேற்பு….

Viyayakanth: நடிகராக மட்டுமில்லாமல் முன்னாள் நடிகர் சங்க தலைவர், தேமுதிக தலைவர், எதிர்கட்சி தலைவர் என பல பதவிகளை வகித்தவர் கேப்டன் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடி போராடி பல அவமானங்களை சந்தித்து சினிமாவில் நடிக்க துவங்கியவர்.

80,90களில் இவரின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தாவர். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது கலைநிகழ்ச்சிகள் நடத்தி அந்த சங்கத்தின் கடனை அடைத்தார். அதன்பின் அரசியலிலும் நுழைந்து எதிர்கட்சி தலைவராகவும் மாறினார்.

இதையும் படிங்க: வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்!.. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?…

கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மாதம் 28ம் தேதி மரணமடைந்தார். இவரின் மரணம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரின் இறப்புக்கு பொதுமக்கள், நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

vishal

கமல்ஹாசன், ரஜினி, விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் அடுத்தநாளே வந்து அஞ்சலி செலுத்தினர். சூர்யா, விஷால், கார்த்தி என பலரும் கொஞ்சம் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஜித், வடிவேலு, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் வரவில்லை.

இதையும் படிங்க: ராஷ்மிகான்னு நம்பி போனா இப்படி ஏமாத்திப்புட்டீங்களேடா!. ஆந்திராவில் அசிங்கப்பட்ட தனுஷ்…

இந்நிலையில், நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற்றது. விஷாலின் தலைமையில் நடந்த இந்த நினைவேந்தல் கூட்டத்தில், கமல், விக்ரம், கார்த்தி, நாசர், சரத்குமார், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, ஜெயம் ரவி,கமல்ஹாசன், கலைப்புலி தாணு, எஸ்.பி.முத்துராமன், தேவயாணி, வாகை சந்திரசேகர், நடிகை ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், எஸ்.வி.சேகர், பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், கருணாஸ், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு என பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் எல்லோரும் விஜயகாந்துடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள். நடிகர்கள் ரஜினி,விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களும் இதில் கலந்துகொள்ளவில்லை. விஜயகாந்த் சார்பில் அவரின் மைத்துனர் சுதீப் மற்றும் அவரின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எங்க குடும்பத்துல அவங்கதான் ஹிட்லர்!.. அருண் விஜய், ஸ்ரீதேவி உடைத்த குடும்ப ரகசியம்!

google news
Continue Reading

More in Cinema News

To Top