வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்!.. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?...
Jan 19, 2024, 21:09 IST
Captain miller: தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர், அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் விடுமுறையை குறி வைத்து கடந்த 12ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் சந்தீப் கிஷன், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார், பிரியங்கா மோகன், ஜெயிலர் பட புகழ் வினாயகன், நிவேதிதா சதீஷ் என பலரும் நடித்துள்ளனர். ராக்கி மற்றும் சாணி காயிதம் ஆகிய ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான படம் என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றதால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையும் படிங்க: ராஷ்மிகான்னு நம்பி போனா இப்படி ஏமாத்திப்புட்டீங்களேடா!. ஆந்திராவில் அசிங்கப்பட்ட தனுஷ்… இப்படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான் அப்டம் வெளியானது. ஆனாலும், அயலான் படத்தை விட கேப்டன் மில்லர் நல்ல வசூலை பெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அயலானை விட கேப்டன் மில்லர் நல்ல வசூலை பெற்று வருகிறது.
அதேபோல், ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாடுகளிலும் கேப்டன் மில்லர் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியான நாள் முதலே ஒவ்வொரு நாளும் இப்படத்தின் வசூல் நிலவரம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 8 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் உலக அளவில் ரூ.86.12 கோடியை வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்படியே போனால் இன்னும் 2 நாட்களில் இப்படம் ரூ.100 கோடி வசூலை தொட்டுவிடும் என கணிக்கப்படுகிறது. அதேநேரம், அயலான் படம் இந்த அளவுக்கு வசூலை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் 2 நாட்கள் வாரவிடுமுறை இருப்பதால் வருகிற ஞாயிற்றுக்கிழமை கேப்டன் மில்லர் படம் ரூ.100 கோடியை தாண்ட வாய்ப்பிருக்கிறது. இதையும் படிங்க: எங்க குடும்பத்துல அவங்கதான் ஹிட்லர்!.. அருண் விஜய், ஸ்ரீதேவி உடைத்த குடும்ப ரகசியம்!