Connect with us
ajith

Cinema News

எக்கு தப்பா எகிறும் பட்ஜெட்!.. கவலைப்படாத அஜித்!.. லைக்கா புலிவாலை புடிச்ச கதையா போச்சி!..

Actor Ajith: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. ஒரு சமயம் படக்குழு சென்னைக்கு வந்துவிட்டதாகவும் ஒரு சமயம் மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்று விட்டதாகவும் மாறி மாறி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

படம் ஆரம்பிக்கும் போதில் இருந்தே ஏகப்பட்ட குளறுபடிகளை சந்தித்துதான் டேக் ஆஃப் ஆனது. முதலில் விக்னேஷ் சிவனை வைத்து படத்தை அறிவித்த லைக்கா அதன் பின் இயக்குனரையே மாற்றியது. ஒரு வேளை விக்னேஷ் சிவன் எடுத்திருந்தால் லியோ படத்திற்கு முன்பே இந்த படத்தை ரிலீஸ் செய்திருப்பார்.

இதையும் படிங்க: எங்க குடும்பத்துல அவங்கதான் ஹிட்லர்!.. அருண் விஜய், ஸ்ரீதேவி உடைத்த குடும்ப ரகசியம்!

சரி, அதுதான் நடக்கவில்லை. அதன் பிறகு ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படத்தில் இருந்து நீக்கப்பட ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்குள் நுழைந்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க அஜர்பைஜானில்தான் முழு படத்தையும் எடுக்க வேண்டும் என்று அஜித் சொன்னதின் பேரில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்,

அங்கு உள்ள காலநிலை ஏற்புடையதாக இல்லை. கடுங்குளிராக இருப்பதால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். அதுமட்டுமில்லாமல் ஏதாவது ஒரு கேமிரா வேண்டுமென்றாலும் சென்னையில் இருந்து கொண்டு செல்வதற்கு மூன்று நாள்கள் ஆகிவிடும் என்பதால் அங்கேயே வாங்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: காதல் கணவனை விவாகரத்து செய்கிறாரா நமீதா? எல்லாத்துக்கும் காரணம் அந்த தொழிலதிபர்

ஆனால் அங்கு உள்ள விலைவாசிக்கு ஏகப்பட்ட பொருட்செலவு ஆகிவிடுகிறதாம். கிட்டத்தட்ட விடாமுயற்சி படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பிற்கான செலவு 50 லட்சம் ஆகிவிடுவதாக தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இப்படியே போனால் லைக்காவின் நிலைமை என்னவாகும் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்சனை என்னவெனில் படப்பிடிப்பு நடக்காத நாட்களிலும் அதற்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 110 கோடிக்கு வாங்கியுள்ளதால் அதில் கொஞ்சம் லைக்கா சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: பல கோடி நஷ்டம் வருமா?!. விக்கியிடம் வசமா சிக்கிய லலித்குமார்!.. கமல் எஸ்கேப் ஆனது சும்மா இல்ல!..

google news
Continue Reading

More in Cinema News

To Top