இதுவரை நடிக்காத கதையில் ரஜினி!. சம்பவம் செய்யப்போகும் தலைவர் 170!…

Published on: October 16, 2023
rajini
---Advertisement---

ரஜினி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர். இவர் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் வாசிங்க:அந்த நடிகர் மாதிரி நடிங்க!. ரஜினியிடம் வாயை விட்டு மாட்டிகொண்டு முழித்த பிரபல இயக்குனர்…

இப்படத்தை  ஜெய்பீம் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல்ராஜா இயக்குகின்றார்.  லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளனர். மேலும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படபிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சான் கெளரவ வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ரித்திகா சிங், மஞ்சு வாரியார், ஃபகத் ஃபசில், துஷாரா விஜயன் போன்ற பல முன்னணி கதாபாத்திரங்களும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் ஆரம்பத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் படபிடிப்புகள் திருநெல்வேலியில் உள்ள காவல்கிணறு பகுதியில் உள்ள செங்கல் சூலையில் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலாவின.

இதையும் வாசிங்க:டைரக்டர் ஆகலன்னா இந்த வேலையத்தான் செஞ்சிருப்பேன்!. லோகேஷுக்கு இப்படி ஒரு ஆசையா?!…

மேலும் இப்படத்தில் கல்வி சம்பந்தமான ஊழல்களை வெளிகாட்டும் விதமாக கதை இருக்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது செங்கல் சூலையில் இதன் படபிடிப்புகள் நடப்பதை பார்க்கும்போது இதில் பணியாற்றும் குழந்தை தொழிலாளர்களை காப்பாற்றும் நோக்கில் இக்கதை உருவாகும் என நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

மேலும் இவ்வாறு குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமானது என காண்பிக்கும் வகையில் தலைவர் 170-ன் கதை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ தலைவர் அவரது ரசிகர்களுக்கு டிரீட் வைக்கப்போவது உறுதி.

இதையும் வாசிங்க:இந்த படம் எடுத்துதான் நாசமா போனேன்!.. ஃபிலிங்ஸ் காட்டும் கவுதம் மேனன்….

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.