கமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு நேரில் போய் வாய்ப்பு கேட்ட ரஜினி!... ஒரு சுவாரஸ்ய பின்னணி!…
Rajinikanth: ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிக்க போவதில்லை என முடிவெடுக்கின்றனர். இருந்தும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். அந்த நிகழ்வு நடக்க ரஜினியே காரணமாகி இருந்தார். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சுமார் 13 திரைப்படங்கள் வரை தமிழில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்திலே இனி இருவரும் ஒரே படத்தில் நடிக்க கூடாது என ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். ஆனாலும் அதற்கு பின்னால் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.
இதையும் படிங்க: காதலர் தினத்துக்கு சர்ப்பரைஸ் கொடுக்கப் போகும் அஜித்!.. அப்பாடா இப்பவாவது சொல்றீங்களே!..
அதற்கு ரஜினி தான் காரணம். ஒருமுறை ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி அட்மிட் ஆகி இருந்தார். அருகில் வாகினி ஸ்டுடியோவில் கமல்ஹாசன் நடிப்பில் 'தாயில்லாமல் நானில்லை' படப்பிடிப்பு நடக்கிறது என ரஜினிக்கு தெரிந்ததாம்.
அதைக் கேட்ட ரஜினிக்கு திடீரென ஒரு ஆசை வந்தது. கமலுடன் மீண்டும் ஒரே ஒரு காட்சியிலாவது சேர்ந்து நடிக்க முடிவு செய்தவர். காரை எடுத்துக்கிட்டு நேராக ஸ்டுடியோவுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் தியாகராஜனைச் சந்தித்த ரஜினி எனக்கு கமலுடன் நடிக்க சான்ஸ் தருவீங்களா எனக் கெஞ்சலாக கேட்டாராம்.
இதை பார்த்த தியாகராஜனோ உடனே ஓகே என்றாராம். ஆனால் கமலை கேட்கணும் எனச் சொல்லி அவருடமும் சென்று கேட்டாராம். அவரும் உடனே ஓகே சொல்ல இல்லப்பா நம்ம ஒப்பந்தம் என ரஜினி இழுத்து இருக்கிறார். நாம முழு நீள படத்தில் நடிக்க கூடாதுனு தானே பேசிக்கிட்டோம். இதுல உனக்கு இரண்டு நிமிஷ காட்சி தானே. நடிப்பா என்றாராம்.
இதையும் படிங்க: பாம்புனா கொத்ததான் செய்யும்.. என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா? வடிவேலுவை தோலுரித்த ஆர்த்தி
அதன்பின்னரே, ரஜினி ஒரு கௌரவ வேடத்தில் தாயில்லாமல் நானில்லை படத்தில் சண்டை காட்சியில் நடித்து இருப்பார். அப்படத்தில் இளவரசி ஸ்ரீதேவியை நாடகக் கலைஞனாக இருக்கும் கமல் காதலிப்பார். அவரை கொல்ல ஸ்ரீதேவியின் தந்தை ரவுடி ரஜினியை ஏவிவிடுவார். இருவருக்கும் சண்டை நடக்கும். பின்னர் ஸ்ரீதேவி இடையில் வந்து கமலை காப்பாற்றுவார்.
ரஜினி தன் செயலுக்கு வந்து வருத்தம் தெரிவித்துவிட்டு வாழ்த்தி செல்வார். இதான் அந்த காட்சி. தனக்கு ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் படத்தில் ஒரு கௌரவ வேடம் வேண்டும் என கமல் கேட்டதாக ஒரு தகவல் அப்போதே இருந்தது. ஆனால் அது பின்னாட்களில் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு ரசத்துக்கு 70 ஆயிரம் கொடுத்த மனுஷன பாத்துருக்கீங்களா? யாரும் கண்டிராத மயில்சாமியின் மறுபக்கம்