தலைவர் 171-ல் நடந்த எதிர்பாராத திருப்பம்!.. லோகேஷை டீலில் விடுகிறாரா ரஜினி?!..

by Rohini |   ( Updated:2024-01-14 09:39:30  )
rajini
X

rajini

Rajini 171: தமிழ் சினிமாவில் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். என்றுமே ஒரு சூப்பர் ஸ்டாராக மக்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார். தற்போது ரஜினி த. ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக லோகேஷுடன் இணையப் போவதாகவும் அது ரஜினியின் கெரியரிலேயே மிகச்சிறந்த படமாக அமையும் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது. அதுவும் அடுத்த வருடம் அந்தப் படம் வெளியாவதும் அது ரஜினியின் பொன்விழா ஆண்டாகவும் இருப்பதால் அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படிங்க: பேராசையால எல்லாம் போச்சி!.. அயலானோட எல்லாம் ஓவர்!. நிம்மதி பெருமூச்சி விட்ட எஸ்.கே!..

ஆனால் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான சுபேர் ரஜினியின் லைன் அப்பை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அதாவது வேட்டையன் திரைப்படத்தை அடுத்து ரஜினி அடுத்ததாக நெல்சனுடன் ஜெயிலர் 2 படத்தில்தான் நடிக்கிறார் என்றும் அதற்கான ஆலோசனையில்தான் நெல்சன் இப்போது பெங்களூரில் இருக்கும் ரஜினியின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

ஏற்கனவே ஜெயிலர் தந்த வெற்றி அதன் அடுத்த பாகத்திற்கும் பலத்த எதிர்பார்ப்புகள் இருப்பதாலும் அதற்காக கதைகள் தயாராக இருப்பதாகவும் அந்தப் படத்தில்தான் ரஜினி நடிக்க இருக்கிறார் என்று சுபேர் கூறினார். அந்தப் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி இணைவார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இந்த கடையில எல்லாமே செம ஒர்த்.. நடிகை கௌதமி செய்த பொங்கல் ஷாப்பிங்!.. வைரல் வீடியோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துதான் ரஜினி மாரி செல்வராஜை அழைத்து அடுத்த படம் பண்ணலாம் என்று சொன்னதாகவும் கூறினார். அதனால் இந்தப் படங்களையெல்லாம் அடுத்துதான் லோகேஷின் படம் என்றும் சுபேர் கூறினார்.

Next Story