தளபதிக்கு பின்னர் மீண்டும்.. லோகேஷின் பக்கா ஸ்கெட்ச்… ஓகே சொல்வாரா ரஜினிகாந்த்..?
Thalaivar171: ரஜினிகாந்த் தன்னுடைய வயதினையுமே மீறி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படங்களின் அப்டேட் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஒரு ஆச்சரிய தகவலும் ரிலீஸாகி இருக்கிறது.
பல வருடத்திற்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் கதை, ரஜினியின் நடிப்பு என பலவையும் பாராட்டுக்களை பெற்றாலும் மம்முட்டி, சிவராஜ்குமார் நடித்தது பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: பராசக்தி படத்திற்கு சிவாஜி சம்பவளம் இவ்வளவுதானா?!. என்னடா நடிகர் திலகத்துக்கு வந்த சோதனை!…
அதனை தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் தங்களுடைய படங்களில் மல்டி ஸ்டாரை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்வதை வழக்கமாக்கி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்தின் 170 படத்தில் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கிறார்.
அப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிய இருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடத்தின் மார்ச்சில் தலைவர்171 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. இதற்கு முன்னரே ஜெயிலர் படத்தின் வில்லனாக மம்முட்டி நடிக்க வைக்க கேட்டதாகவும் அதற்கு ரஜினி தரப்பே மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தலைவர்171 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக மம்முட்டி நடிப்பாரா? இல்லை கேமியோவாக வருவாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: காக்கானு சொல்லி இத்தன நாளா ஏமாத்திருக்காங்க! பராசக்தி படத்தின் ‘கா..கா..கா’ பாடலில் இருக்கும் ட்விஸ்ட்…
இதற்கு முன்னர் வில்லன் ரோலில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் அவர் ரஜினிக்கு இணையாக இருக்க மாட்டார். அதனால் தான் தற்போது மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் ஓகே சொன்னால் 32 வருடம் கழித்து இருவரும் இணைய இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.