அந்த விஷயத்தில் இவரை அடிச்சிக்க ஆளே...இல்லைப்பா...மனுஷன் 2 கோடிக்கும் அசரலயே..!!!

Rajkiran
என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, பாசமுள்ள பாண்டியரு படங்களில் ராஜ்கிரண் கிராமத்து மக்களுக்கே உரித்தான பாரம்பரியமிக்க வேட்டி சட்டையில் வெகு அழகாகக் காட்சியளிப்பார்.
மண்ணின் மைந்தர் என்றால் இவர் தான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக அவதாரங்களைக் கொண்டவர் ராஜ்கிரண்.
வைகைப்புயல் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். என்னப் பெத்த ராசா, பாசமுள்ள பாண்டியரே, மாணிக்கம், எல்லாமே என் ராசாதான், கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, சண்டைக்கோழி ஆகிய படங்களில் இவரது முத்தாய்ப்பான நடிப்பைக் காணலாம்.
தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் வேட்டி சட்டையில் தான் வருவார். மக்களின் மனம் கவரும் விதத்தில் இவரது நடை, உடை, பாவனை இருக்கும். பெரியவர் தோரணையில் வார்த்தைகளைக் கவனமாகக் கையாண்டு பக்குவமாக பேசுவதில் வல்லவர் ராஜ்கிரண்.
இவரது படங்களைப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
சினிமாவுக்குள் கஷ்டப்பட்டு நுழைந்து தனது திறமையால் நடிகரும், இயக்குனருமாக முன்னேறி பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். அதிலும் அவரது படங்களைத் தாய்மார்கள் உச்சி முகர்ந்து வரவேற்பார்கள்.
எவ்வித ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இவரது படத்தில் இருக்காது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் ராஜ்கிரண். சமீபகாலமாக இவர் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.
கிராமத்தில் வாழும் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இவரை அறிமுகப்படுத்த தேவையில்லை. தான் நடித்த படங்களால் கிராமத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சுருக்கமாய் சொல்லவேண்டுமெனில் தம் தமையனை, மாமனை, தந்தையை, பாட்டனை இவருள் பார்த்தனர், பார்க்கின்றனர்.

Rajkiran2
இதனை வணிக லாபமாக்க எண்ணிய வேட்டி நிறுவனமொன்று இவரை அணுகி தங்கள் வேட்டி விளம்பரமொன்றில் நடிக்க கேட்டனர்.
நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷ_ட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன்.
அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

Rajkiran in pattathu arasan
நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை.
மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க...
இவர் சமீபத்தில் அதர்வா உடன் பட்டத்து அரசன் படத்தில் வேட்டி சட்டையில் நடித்து அசத்தினார்.