Cinema History
ராஜ்கிரண் அந்த விஷயத்துல என்ன அழவச்சார்!.. சீக்ரெட்டை பகிர்ந்த ‘பூவே உனக்காக’ பட நடிகை…
Actress sangeetha: தமிழ் திரையுலகில் பல வருடங்களுக்கு முன்பே வினியோகஸ்தராக நுழைந்தவர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து ஹீரோவாக பல ஹிட் படங்களிலும் நடித்தார். இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.
அதேபோல், 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சங்கீதா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்துள்ளார். என் ரத்தத்தின் ரத்தமே என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: எப்ப பாத்தாலும் ‘லியோ’ பத்தியே பேசுறீங்களே! சத்தமில்லாமல் ரோலக்ஸ் செய்ற காரியத்தை பார்த்தீங்களா?
சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ளகுட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சி, அலெக்ஸாண்டர், கங்கா கவுரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சியை நம்பாமல் டீசண்டான உடையணிந்து நடித்த நடிகைகளில் சங்கீதாவும் ஒருவர்.
பூவே உனக்காக படத்தில் நடித்தபோது அப்படத்தின் கேமரா மேன் மாதவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போது கேரளாவில் வசித்து வரும் சங்கீதா மீண்டும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மெக்கானிக்காக மாறிய சிவாஜி… ஆனா கடைசியில் நடந்தது தான் மாஸ்.. நடிகர் திலகமுனா சும்மாவா..!
தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்த ‘பூவே உனக்காக’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சங்கீதா ‘எல்லாமே என் ராசாதான் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அப்போது நான் 10ம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன். எனவே, பெரிய பெண்ணை போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பின்னரே படப்பிடிப்பு துவங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
தினமும் எனக்கு ராஜ்கிரண் அலுவலகத்திலிருந்து உணவுகள் வரும். அதை நான் சாப்பிட்டே ஆகவேண்டும். வீட்டில் என் அம்மா அப்பா சொல்லியே அதிகம் சாப்பிடாத நான் அந்த படத்தில் நடிப்பதற்காக அதிகமாக சாப்பிட்டேன். சில நாட்கள் சாப்பிட முடியாமல் அழுதும் இருக்கிறேன். ஆனால், அந்த படம் என்னை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்த்தது’ என சங்கிதா பேசினார்.
இதையும் படிங்க: லியோ கிளைமேக்ஸில் தெறிக்கவிட்ட அர்ஜூன்!.. பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் செஞ்சதுதான் ஹைலைட்!…