ஐஸ்வர்யா செஞ்ச வேலை!.. ரஜினியின் சம்பளத்தில் கை வைக்கும் லைகா!. அடப்பாவமே!...

by சிவா |   ( Updated:2024-01-18 14:56:59  )
laal salaam
X

Lal salaam: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பல வருடங்களுக்கு பின் இயக்கியுள்ள திரைப்படம்தான் லால் சலாம். தனுஷை பிரிந்தபின் தனது கவனத்தை திரைப்படங்களை இயக்கும் பக்கம் திருப்பினார் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை வைத்து கிரிக்கெட்டை மையாக கொண்டு ஒரு கதைய எழுதினார். விளையாட்டில் மதமும், அரசியலும் எப்படி விளையாடுகிறது என்பதை திரைக்கதையாக எழுதியிருக்கிறார். அதோடு, இந்த படத்தில் தனது அப்பா ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்தால் வியாபரத்திற்கு பிரச்சனை இருக்காது என நினைக்க, மகளின் ஆசைக்கு ரஜினியும் சம்மதித்தார்.

இதையும் படிங்க: தம்பி ஓரமா போ!.. சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த தனுஷ்!.. கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்…

ரஜினியும் சில நாட்கள் கால்ஷீட் கொடுத்து இப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இப்படத்தை முடித்து கடந்த தீபாவளிக்கே வெளியிட திட்டமிட்டனர்.

lal salaam

ஆனால், ரஜினியை வைத்து எடுக்கப்பட்ட சில காட்சிகளின் ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டதாக செய்திகள் கசிந்தது. அதனால், தீபாவளிக்கு இப்படம் வெளியாகவில்லை. ஒருபக்கம், இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்பனை ஆகவில்லை. எனவே, பொங்கலுக்கும் இப்படம் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: போஸ்டர் காசு கூட வரல!.. புலம்பும் திரையுலகம்!.. வசூலில் மண்ணை கவ்விய அயலான்!..

அதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேசிய ரஜினி தொலைக்காட்சி உரிமையை சன் டிவியை வாங்க வைத்துவிட்டார். இன்னும் ஓடிடி மற்றும் பாக்கி இருக்கிறது. தற்போது பிப்ரவரி 9ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.

ஒருபக்கம், சில ஃபுட்டேஜ்கள் காணாமல் போனதால் அந்த காட்சியை மீண்டும் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பொதுவாக இது இயக்குனரின் தவறு என்பதால் அந்த படப்பிடிப்பு செலவை அவரின் தலையில் கட்டி சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள். ஆனால், லைக்காவை தொடர்பு கொண்ட ரஜினி அந்த செலவுகளை என் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க: நீங்க ரொம்ப சப்பை ஃபிகரு!.. கோட் ஹீரோயினை அந்த ஹீரோ படத்துல பார்த்து ஹார்ட் அட்டாக் வந்துடுச்சே!

Next Story