ரஜினியே அழைத்தும் சினிமாவில் நடிக்க மறுத்த பிரபலம்... இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

by sankaran v |   ( Updated:2024-03-25 06:57:12  )
Rajni
X

Rajni

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரம் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும். அதே நேரம் ரஜினிகாந்துடன் நடிக்க அத்தனை பேரும் ஆசைப்படுவார்கள். ஆனால் ரஜினியே அழைத்தும் நடிப்பதற்கு மறுத்த பிரபலம் ஒருவர் இருந்தார். அது யார்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

90களில் டிவி நிகழ்ச்சிகளில் பெப்சி உமா தவிர்க்க முடியாத தொகுப்பாளராக இருந்தார். அவர் வாரத்திற்கு ஒரு முறை வந்து நேயர்கள் விரும்பிக் கேட்ட பாடலைப் பற்றி சிலாகித்து சொல்வார். நேயர்களிடம் போனில் தொடர்பு கொண்டு பேசும்போது அவரது குரலும், பேசும் விதமும் பரவசப்படுத்தும்.

அவ்வளவு அழகான வர்ணனை தருவார். அதே போல டிவி நிகழ்ச்சிகளில் அவர் எதைத் தொகுத்தாலும் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். 15 ஆண்டுகளாக ரசிகர்களைக் கட்டிப் போட்டு இருந்தார். குரல் மட்டுமல்லாமல் வசீகரிக்கும் முகத்தோற்றமும் அவரிடம் இருந்தது தான் பிளஸ் பாயிண்ட்.

அந்த வகையில் அவர் ஏன் இதுவரை ஒரு சினிமாவில் கூட நடிக்கவில்லை என்ற கேள்வி எழலாம். அவ்வளவு பிரபலமான அவருக்கு சினிமா வாய்ப்பு வராமலா இருந்து இருக்கும்? அப்படி என்ன தான் நடந்தது? வாங்க பார்க்கலாம்.

Pepsi Uma

Pepsi Uma

இந்திப்பட இயக்குனர் சுபாஷ் கை ஷாருக்கானுடன் நடிக்க வைக்க ஒப்பந்தம் பேச பெப்சி உமாவின் வீட்டுக்கே வந்தார்களாம். ஆனாலும் அவர் நடிக்க சம்மதிக்கவில்லையாம். அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கே ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். அப்போது ரஜினியே பெப்சி உமாவுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டு போன் செய்தாராம். இதுபற்றி ஒரு முறை பேட்டி ஒன்றில் பெப்சி உமாவே தெரிவித்துள்ளார்.

நான் சினிமாவில் நடிக்காததற்காக வருத்தப்பட்டதே கிடையாது. ரஜினி சார் என்னை பர்சனலா முத்து படத்துல நடிக்கவும், இன்னொரு படத்துல நடிக்கவும் அழைத்தார். நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்போது எனக்கே தயக்கமாகத் தான் இருந்தது.

இப்போது என்ன செய்கிறார் என்றால் தனது குடும்ப பிசினஸான கிரிப்டன் என்ற கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாராம். இது ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி. விரைவில் தனக்கு நல்ல நிகழ்ச்சி கிடைத்தால் சின்னத்திரையில் தொகுத்து வழங்கவும் தயாராக உள்ளாராம்.

இதையும் படிங்க... இந்தியாவிலேயே முதல் படம்!. பல சாதனைகளை செய்த எந்திரன்!.. தலைவர்னா மாஸ்தான்!..

ஒரு காலகட்டத்தில் இவர் மிகவும் பிரபலமாக, ரசிகர்கள் இவருக்குக் கட் அவுட்டே வைத்து விட்டார்களாம். அந்தளவு சினிமாவிலே கால் பதிக்காமல் சின்னத்திரை மூலமே புகழின் உச்சத்தைத் தொட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றால் அது இவர் தான்..

Next Story