More
Categories: Cinema News latest news tamil cinema gossips

நான் தாண்டா ஒரிஜினல் டான்.! வெறித்தனமாக காம்பேக் கொடுக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்.! விவரம் இதோ…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசானது.

Advertising
Advertising

தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.பீஸ்ட்  திரைப்படம் தோல்வி அடைந்ததன் காரணமாக, நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக தற்போது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் இணைந்து திரைக்கதை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – ஒரே ஒரு கேள்வியால் ஆடிப்போன சூர்யா.! திரைக்கதை மன்னன் கூறிய திரைமறைவு சீக்ரெட்ஸ்.!

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே பாட்ஷா, காலா, கபாலி போன்ற படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

டான்-ஆக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த சமயம் கம்பேக் வெற்றி கொடுப்பாரா என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனை நெல்சன் கச்சிதமாக செய்து முடிப்பார் என்றும் நம்புகின்றனர். அடுத்தடுத்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
Manikandan

Recent Posts