கங்குவா விழாவில் ரஜினி பேசியதைக் கேட்டு மிரண்டு போன பாலிவுட்... நடந்ததைக் கேட்டா அதிருதுல்ல..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வரும் படம் வேட்டையன். படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ இன்று வெளியானதைத் தொடர்ந்து இதுகுறித்த விமர்சனங்கள் வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பாடலில் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐயில் கொண்டு வந்துருக்காங்க. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
Also read: மலேசியாவாசுதேவன் கடைசியாக பேசுன அந்த வார்த்தை… நெகிழ்ந்து பேசிய ரஜினி
இந்தப் பாடல் நமக்கு முத்து படத்தையும் நினைவு படுத்துகிறது. அதுல ரஜினி மலையாளம் பேசுவாரு. மனசிலாயோன்னு கேட்டுட்டு பட்டின்னு காமெடிக்கு சொல்வாரு. அது விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய சீன். முத்து படம் ஓடாதுன்னு சொன்னாங்க. அதுல ஆக்ஷன் இல்லன்னாங்க.
ஆனா சக்கை போடு போட்டது. இந்தப் படம் டான்சிங் மகாராஜாங்கற பேருல ஜப்பான்ல வெளியாகி சக்கை போடு போட்டது. இதுக்குப் பிறகு ரொம்ப காலமா அந்த ரெக்கார்டை முறியடிக்காம இருந்தாங்க. அப்புறம் ஆர்ஆர்ஆர் படம் தான் அதை முறியடிச்சுது.
அதே போல ஜெயிலர் படமும் 600 கோடி வசூலை ஈட்டியது. ரஜினிக்கிட்ட படத்தின் வில்லன் விநாயகன் அடிக்கடி மனசிலாயோன்னு பேசுவார். இது டிரெண்டிங் ஆனது. இந்த டயலாக்கும் இந்த பாடலைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடலில் ரஜினியுடன் சேர்ந்து அனிருத் ஆடியுள்ளார்.
படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். அவர் ரஜினிக்கு 40 ஆண்டுகால நண்பர். அப்போது கருப்பா உள்ளவர்களை மதராசின்னு பாலிவுட்ல சொல்வாங்க.
அவங்களை உள்ளே விடக்கூடாதுன்னு இருந்தாங்க. அந்தக் காலகட்டத்தில் ரஜினியைக் கையைப் புடிச்சி அழைத்துச் சென்றவர் அமிதாப் பச்சன். அதைப் பார்த்ததும் ரஜினிக்கு அமிதாப் சப்போர்ட்னதும் அவர் நடித்த ஐந்தாறு படங்கள் ஹிட். அப்படி ஒன்று தான் கங்குவா.
இதன் வெற்றி விழாவில் ரஜினி ஓபன் டாக் கொடுத்து விட்டார். 'என்னை வந்து கருப்பானவன்னு கேலி பண்றாங்க. என்னை மதராசின்னு சொல்றாங்க. என்னோட ஸ்டைலைப் பண்ணவிடாம பண்றாங்க'. அப்படின்னு சொன்னதும் பாலிவுட்ல இருந்து அப்படியே ஒதுக்கிட்டாங்க. அங்க ஒதுக்கினதால தான் நமக்கு ஒரு சூப்பர்ஸ்டார் கிடைச்சிருக்காரு.
ரஜினி படத்தோட வேட்டையனுக்குப் போட்டிக்கு வந்த கங்குவாவே வெளியே போயிடுச்சு. இப்ப மனசிலாயோவைக் கொண்டாடுறாங்க. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.