Cinema History
ரஜினி படங்களோடு மோதி மாஸ் காட்டிய ராமராஜன்!.. அட இவ்வளவு படங்களா?!..
80களில் ரஜினி, கமல் படங்கள் என்றால் அது பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி விடும். ஆனால் அதே காலகட்டத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ராமராஜன். அப்போது அவரது படங்கள் என்னென்ன வந்தன? அவை வெற்றி பெற்றனவா என்று பார்ப்போம்.
மாவீரன் – நம்ம ஊரு நல்ல ஊரு
1986 தீபாவளிக்கு ரஜினிக்கு மாவீரன் படம் வெளியானது. அதே நவம்பரில் ராமராஜனுக்கு நம்ம ஊரு நல்ல ஊரு படமும் வெளியானது. மாவீரன் படம் பிளாப். ராமராஜனுக்கு ஹிட். சிறந்த நடிகர் விருதும் கிடைத்தது.
1987 மார்ச்சில் ரஜினிக்கு வேலைக்காரன் படம் வெளியானது. இது 125 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அடுத்த மாதம் ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ரிலீஸ். இதுவும் ஹிட்.
ஒன்று எங்கள் ஜாதியே – ஊர்க்காவலன்
1987 ஜூலையில் ராமராஜனுக்கு ஒன்று எங்கள் ஜாதியே படம் ரிலீஸ். இது ராமராஜன் இயக்கி நடித்த படம் அடுத்த மாதமே ரஜினிக்கு ஊர்க்காவலன் படம் ரிலீஸ். இதுல ரெண்டு படங்களுமே சுமாரான வெற்றி.
1988 மார்ச்சில் ராமராஜன் நடித்த ராசாவே உன்னை நம்பி படம் ரிலீஸ். இது ஹிட். அடுத்த மாதமே ரஜினிக்கு குரு சிஷ்யன் படம் ரிலீஸ். இது பிளாக் பஸ்டர் ஹிட். வெள்ளி விழா படம். 1988 ஆகஸ்டில் ராமராஜனின் எங்க ஊரு காவல்காரன் ரிலீஸ். செம மாஸ். அடுத்த மாதமே ரஜினிக்கு தர்மத்தின் தலைவன் படம் ரிலீஸ். இது எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. 1988 தீபாவளிக்கு ரஜினிக்கு கொடி பறக்குது படமும், ராமராஜனுக்கு நம்ம ஊரு நாயகன் படமும் ரிலீஸ். இதுல ராமராஜன் தான் வின்னர்.
ராஜாதி ராஜா – எங்க ஊரு மாப்பிள்ளை
1989 மார்ச்சில் ரஜினிக்கு ராஜாதி ராஜா படம் வெள்ளி விழா கொண்டாடி வெற்றி பெற்றது. அடுத்த மாதமே வெளியான ராமராஜன் படம் எங்க ஊரு மாப்பிள்ளை. இதுவும் ஹிட் தான்.
1989 மே மாதம் ரஜினிக்கு சிவா படம் ரிலீஸ். இது பிளாப். அடுத்த மாதமே ராமராஜனுக்கு கரகாட்டக்காரன் படம் ரிலீஸ். இது பிளாக் பஸ்டர் ஹிட்.
இது ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
ராஜா சின்ன ரோஜா – ராஜா ராஜா தான்
1989 ஜூலையில் ரஜினிக்கு ராஜா சின்ன ரோஜா ரிலீஸ். இது வெள்ளி விழா படம். அடுத்த மாதமே வெளியானது ராமராஜனின் ராஜா ராஜா தான். இதுவும் ஹிட் தான். 1989 தீபாவளிக்கு ரஜினிக்கு மாப்பிள்ளை படம் ரிலீஸ். இது பிளாக் பஸ்டர் ஹிட். அதே நாளில் வெளியான ராமராஜனின் தங்கமான ராசா, அன்புக்கட்டளை படம் ரிலீஸ். இவை இரண்டுமே ஹிட்.
1989 டிசம்பரில் ராமராஜன் நடித்த மனசுக்கேத்த மகாராசா ரிலீஸ். இதுவும் ஹிட். அடுத்த மாதமே வெளியான ரஜினியின் பணக்காரன் படமும் ஹிட் அடித்தது. அதற்கடுத்த மாதம் ராமராஜனின் பாட்டுக்கு நான் அடிமை ரிலீஸ். இதுவும் சூப்பர்ஹிட். ஆனாலும் இதுல பணக்காரன் தான் வின்னர்.
1990 ஜூனில் ரஜினிக்கு அதிசய பிறவி ரிலீஸ். அடுத்த மாதமே ராமராஜனின் ஊருவிட்டு ஊருவந்து படம் ரிலீஸ். இதுல ரெண்டுமே ஹிட்.
தர்மதுரை – நாடு அதை நாடு
1991 பொங்கலுக்கு ரஜினிக்கு தர்மதுரை படமும், ராமராஜனுக்கு நாடு அதை நாடு படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் வெள்ளி விழா. இதுதான் செம மாஸ். 1991 தீபாவளிக்கு ரஜினியின் தளபதி படமும், ராமராஜனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் 150 நாள்கள்; ஓடி வெற்றி பெற்றது. ராமராஜன் படம் பிளாப்.
1992 ஜூனில் ரஜினிக்கு அண்ணாமலை படம் ரிலீஸ். பிளாக் பஸ்டர் ஹிட். வெள்ளி விழா படம். அதே நாளில் வெளியான ராமராஜனுக்கு பொண்ணுக்கேத்த புருஷன் படமும் ஹிட்.
1992 தீபாவளிக்கு ரஜினிக்கு பாண்டியன் படம் ரிலீஸ். எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அடுத்த மாதமே வெளியான ராமராஜனின் வில்லுப்பாட்டுக்காரன் செம மாஸ்.
1997 மார்ச்சில் ராமராஜன் நடித்து இயக்கிய விவசாயி மகன் படம் ரிலீஸ். எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அடுத்த மாதமே வெளியான ரஜினியின் அருணாச்சலம் தான் ஹிட்.
1999 மார்ச்சில் ராமராஜனின் அண்ணன் படம் ரிலீஸ். இது ஓடவில்லை. அடுத்த மாதமே ரஜினியின் படையப்பா படம் ரிலீஸ். இது பிளாக் பஸ்டர் ஹிட். அடுத்த 20 நாளில் ராமராஜனின் பூ மனமே வா படம் ரிலீஸ். இதுவும் ஓடவில்லை.