பல பொண்ணுங்களோடு பழகி இருக்கேன்!.. ஆனா அவரை பார்த்ததும்!.. ரஜினியின் செம ரொமாண்டிக் ஃபிளேஷ்பேக்!..

by சிவா |
rajinikanth
X

பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்த ரஜினி நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்து பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அபூர்வ ராகங்கள் அவரின் முதல் படமாக இருந்தது. அதன்பின் பல படங்களில் கமலின் நண்பராக நடித்தார்.

ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து தனித்தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார்கள். ரஜினி ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க துவங்கி வசூல் மன்னனாகவும், சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். இவர் லதாவை திருமணம் செய்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகர் ரஜினியுடன் பல படங்களில் அவரின் நண்பராக நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன்.

இதையும் படிங்க: ரஜினியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? அடிக்கடி மெமோ வாங்கும் சுவாரஸ்யங்கள்…

அவருடைய மனைவியின் சகோதரிதான் லதா. ஒர் பேட்டியில் லதா பற்றி ரஜினி சொன்ன விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை எனக்கு மனைவியாக வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில ஆசைகள் இருந்தது. நான் பல பெண்களிடம் பழகி இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் அழகாகத்தான் இருந்தார்கள்.

ஆனால், நான் என் மனதில் எப்படிப்பட்ட பெண்ணை கற்பனை செய்து வைத்திருந்தேனோ அது போல அவர்கள் இல்லை. அவர்களுடன் நான் நெருக்கமாக பழகினாலும் அவர்களிடம் என் எந்த சத்தியமும் செய்யவில்லை. அவர்களை ஏமாற்றவும் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தில்லு முல்லு படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தபோது என்னை பேட்டியெடுக்க சில கல்லூரி மாணவிகள் வந்திருப்பதாக சொன்னார்கள்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பட போஸ்டர்களை கிழிக்க சொன்ன ரஜினி!.. பதறிய தயாரிப்பாளர்!.. அப்படி என்ன கோபம்!..

அவர்கள் சந்திக்க போனேன். அப்போது ‘ஹாய் ஐ யம் லதா’ என தன்னை அறிமுகம் செய்து கொண்டார் லதா. நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினேனோ அப்படியே இருந்தார் லதா. அதனால்தான் அவரின் குடும்பத்தினரிடம் பேசி சம்மதம் வாங்கி அவரை திருமணம் செய்து கொண்டேன் என சொல்லி இருக்கிறார் ரஜினி.

ரஜினியின் போட்டி நடிகர் கமல்ஹாசன் ஒரு திருமணம், 2 லிவ்விங்க் டூ கெதர், அதன்பின் அவர்களை பிரிந்தது என தன் திருமண வாழ்க்கையை அமைத்து கொண்டாலும் ரஜினி தனது திருமண வாழ்க்கையை மிகவும் வெற்றிகரமாகவே இப்போது வரை வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story