ரஜினிகாந்துக்கு மறக்க முடியாத பிறந்தநாள்... அப்போது நடந்த தரமான சம்பவம்
ரஜினிகாந்த் இவ்ளா வயசான பிறகும் இப்படி ஒரு எனர்ஜியோட இருக்காரே எப்படி என்பது தான் பலரது பேச்சாக இருக்கிறது. கூலி படத்துல வர ரஜினியைப் பார்த்ததும் இப்படித் தான் பேசிக்கிட்டு இருக்காங்க.
ரஜினிகாந்த் என்றாலே வேகமான அவரது ஸ்டைலான பேச்சு தான். அது இன்னைக்கு வரை இருப்பது தான் ஆச்சரியம். அவரை அறிமுகப்படுத்துனது பாலசந்தரா இருந்தாலும் அவருக்கு நிறைய சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தது எஸ்.பி.முத்துராமன் தான்.
12.12.12ல் வந்ததுதான் ரஜினிக்கு மிக முக்கியமான பிறந்தநாள். வழக்கமா ரஜினி தன் பிறந்த நாள் அன்று ஊரில் இருக்க மாட்டார். இமயமலைக்குப் போய்விடுவார். ஆனால் இந்த நாளில் ரசிகர்கள் வந்து போயஸ் கார்டனில் குவிந்து விடுகின்றனர்.
வாசலில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன் வந்து பால்கனியில் நிற்கிறார். ரசிகர்கள் தலைவா தலைவான்னு ஆரவாரம் எழுப்புகின்றனர்.
இது செக்யூரிட்டி ஏரியா. அதனால சத்தம் போடாதீங்க. அமைதியா கலைந்து போயிடுங்கன்னு சொல்றாரு. அதன் மறுநாள் தென்சென்னை மாவட்ட ரசிகர்கள் சார்பாக ரஜினிக்கு மாபெரும் பாராட்டு விழா நடக்கிறது. ரஜினி அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கக் கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை. திடீரென அந்தக் கூட்டத்திற்கு ரஜினி அழையா விருந்தாளியாகக் கலந்து கொண்டார் என்கிறார்கள். மீடியாக்கள் பரபரப்பாகிறது.
ரஜினி அப்போது பெரிய ஸ்பீச் கொடுத்தார். வருடா வருடம் நான் பிறந்தநாள் அன்று ஊரில் இருக்க மாட்டேன். ஏன்னா 22 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பிறந்தநாளுக்கு அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் வந்தாங்க. திரும்பும்போது 3 ரசிகர்கள் விபத்தில் இறந்து போயிட்டாங்க.
அவர்களோட தாய்மார்கள் கேட்ட கேள்வி என் மனசில ஒலிச்சிக்கிட்டே இருக்கு. அதனால தான் நான் பிறந்தநாள் விழாவில் கலந்துக்க மாட்டேன். ஆனால் இது மிக மிக முக்கியமான பிறந்த நாள். என் உடல்நிலை சரியில்லாத போது பிரார்த்தனை செய்து மண் சோறு தின்று, அபிஷேகம் செய்து எனக்காக என்னை மீட்டவர்கள் என் ரசிகர்கள். அவர்களுக்கு நன்றி சொல்வதற்காகத் தான் வந்துள்ளேன்.
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அதிமுகவில் இருந்து சரத்குமார், திமுகவில் இருந்து வாகை சந்திரசேகர் வந்திருக்காரு. கோபாலபுரமும், போயஸ் கார்டனும் வந்துருக்கு. இதை விட வேறு என்ன வேணும்னு கேட்கிறார். பெங்களூருவில் என் உயிர் நண்பன் காந்தி உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் கொஞ்சம் கொஞ்சமா தேறி வருவான்னு சொன்னாங்க. ஆனா அவன் உடல்நிலையை வெளியே சொல்லவில்லை.
Also read: ஓடிடி ரிலீஸுக்கு தயாரான லால் சலாம்.. வேற மாதிரி இருக்கும்.. அப்டேட் சொன்ன ஐஸ்வர்யா..
திடீர்னு இறந்து போயிடுறான். நல்ல மருத்துவமனையில் காட்டி இருக்கலாமோன்னு என் மனசு என்னைக் குத்த ஆரம்பிச்சது. அதன்பிறகு ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்கன்னு டாக்டர்கள் அடவைஸ் பண்ணினாங்க. அதை எல்லாம் மறக்கணும்னுதான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் சொன்னார்.
மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.