ஒரு நாளைக்கு 75 பைசாதான் சம்பளம்!.. யாருங்க டவுசர் போடாம இருக்கா?.. பொங்கி எழுந்த மக்கள் நாயகன்
மக்கள் நாயகன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கம்பேக் கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில் அவரைத் தேடி மீடியாக்கள் தினம் தினம் பேட்டி எடுத்து வருகின்றன. கடந்த கால சினிமா அனுபவங்களை இவ்வாறு சொல்கிறார்.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்னு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரும். படங்கள் வரலாம். வராமலும் போகலாம். எந்தப் படங்கள் ரீச் ஆகிருக்குங்கறது தான் முக்கியம்.
இதையும் படிங்க...என்னது ‘பஞ்சதந்திரம் 2’வில் கமல் கேரக்டரில் இந்த நடிகரா? ஆர். ஜே.பாலாஜி சொன்ன சூப்பரான தகவல்
ஒரு மனுஷனுக்கு ரெண்டு கேரக்டர் தான். ஒண்ணு இப்படித் தான் வாழணும்னு நியதி. எப்படியும் வாழலாம்கறது ஒரு நியதி. நான் இப்படித்தான் வாழணும்னு போய்க்கிட்டு இருக்கேன். என்னை வந்து ஃபாலோ பண்ணுங்கன்னு யாரையும் நான் சொல்லல. நான் அதுல போறேன்.
என்னுடைய திரைப்படம், நடிப்புல நாலே வருஷம் தான். 87, 88, 89, 90 இந்த நாலு வருஷம் தான். நாம கொடுத்த படங்கள். பாடல்களும் முக்கிய காரணம். படத்தோட பாடலுக்கு ஆடியன்ஸ் ஒன்ஸ்மோர் கேட்டா அது ஹிட். இளையராஜாவுக்கு நான் டிபன் பரிமாறி இருக்கேன். எனக்கு அது ரொம்ப பெரும் பாக்கியமா இருந்தது. அது நடந்தது 78, 79ல். காரைக்குடி நாராயணன் இயக்கினார். அந்தப் படம் அன்பே சங்கீதா. அப்போ நான் தான் அவருக்கு அசிஸ்டண்ட்.
மதுர மரிக்கொழுந்து பாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்கும். 89ல எனக்கு அன்புக்கட்டளை, தங்கமான ராசா ரிலீஸ். ரஜினிக்கு மாப்பிள்ளை, கமலுக்கு வெற்றி விழா. குருநாதர் அழகப்பன் சார் கேட்டாருன்னு நான் தங்கமான ராசா பண்ணினேன். ரஜினி படம் ஒரு லட்ச ரூபா ஷேர்னா, நம்ம படம் ஒண்ணே கால் லட்ச ரூபா ஷேர். அந்த இடத்துல நான் கொஞ்சம் விழுந்தேன். நான் என்னோட ரூட்டை மாத்திக்க விரும்பல.
ஆரம்பத்துல இருந்தே புரொடக்ஷன், பட்ஜெட். பெரிய பேனர் போகல. தியேட்டர்ல வேலை செய்யும்போது எனக்கு சம்பளம் 75 காசு. எனக்கு ஈகோ கிடையாது. நான் 5 படம் டைரக்ஷன் பண்ணினேன். ஈகோ வந்தா அந்த 5 படத்துலயும் நான் நடிச்சிருப்பேன்.
டவுசர் டவுசர்னு சொல்வாங்க. யாருங்க டவுசர் போடாம இருக்குறா? அந்தப் படத்துல டவுசர், தோள்ல போடுறதுக்கு ஒரு துண்டு. அவ்வளவு தான். ஒரு சட்டையாவது கொடுங்க. எவ்வளவு நேரம் தான் துண்டையே போடுறதுன்னு கேட்டேன். அப்புறம் ஒரு சட்டை கொடுத்தாங்க. அது ஒரு லைப் கேரக்டர். அதனால அப்படித் தான் இருக்கும். நம்ம யாரையுமே பாலோ பண்ண வேண்டாம். மேலூர் சொக்கம்பட்டில குமரேசன் எப்படி இருந்தானோ அப்படியே நடிப்போம்னு அந்தப் படத்துல நடிச்சேன். ராமராஜனின் இயற்பெயர் அதுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1987ல் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் தான் ராமராஜன் டவுசர், துண்டுடன் நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்கியவர் கங்கை அமரன். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். மதுர மரிக்கொழுந்து பாடல் இந்தப் படத்தில் தான் வருகிறது.