கவுண்டமணி இல்லன்னா நான் நடிக்கலன்னு சொல்லி சாதித்த ராமராஜன்... என்ன படம்னு தெரியுதா?
தமிழ்த்திரை உலகில் மக்கள் நாயகன் என்று போற்றப்படுபவர் ராமராஜன். இவரது படங்கள் எல்லாமே பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். அந்த வகையில் கரகாட்டக்காரன் படம் அவரது சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பாடல்களும், வாழைப்பழ காமெடியும் படத்தில் மாஸ் காட்டின.
அந்தப் படத்தின்போது நடந்த விஷயங்கள் குறித்து ராமராஜன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
Also read: கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!
கவுண்டமணி கேரக்டருக்கு முதல்ல நடிக்க இருந்தது எஸ்.எஸ்.சந்திரன். 'அவரு கட்சி ரீதியா வேற. நான் வேற. அதனால கட்சி பற்றி சொல்ல முடியாது'. கங்கை அமரன், குருநாதர் ராமநாராயணன் எல்லாரும் சொல்லிட்டாங்க.
'இதுல எஸ்எஸ்.சந்திரன் தான் நடிப்பாரு'ன்னு. நான் சொல்லிட்டேன். 'இல்ல அவரு இருந்தா சரியா வராது. கஷ்டமா இருக்கும். இதுல கவுண்டரைப் போடுங்க'ன்னுட்டேன். இல்ல முடியவே முடியாதுன்னுட்டாங்க.
நான் அப்புறம் அமரன்கிட்ட சொன்னேன். 'இல்லண்ணேன். அவரு அரசியல் பேசுவாரு. இது அரசியல் படம் இல்ல'ன்னு சொன்னேன். அப்புறம் எல்லாரும் எஸ்எஸ்.னு தான் சொன்னாங்க. நான் சொன்னேன். 'எஸ்எஸ்.தான் போடணும்னு சொன்னா என்னை விட்டுருங்க'ன்னு.
இது கவுண்டமணிக்கு தெரியாது. ஆனா புரொடியூசருக்குத் தெரியும். அதே மாதிரி எஸ்எஸ்சை விட கவுண்டமணி, செந்தில் காமெடி நல்லாருக்கும்னு சொன்னேன். அதே மாதிரி வந்துடுச்சு. இப்பவும் அண்ணே நல்லா இருக்கீங்களான்னு அவரு கூட பேசிக்குவேன்.
பர்த் டே வாழ்த்து சொல்வேன். செந்தில் கிட்ட அடிக்கடி பேசிக்குவேன். எல்லா படமும் மதுரையும், சிட்டியும் தான் விநியோக உரிமையை வாங்குவேன். ஆனால் கரகாட்டக்காரன் படத்தோட ஸ்டில் எடுத்ததும் கோயம்முத்தூரும் கேட்டு வாங்கினேன்.
மதுரை, ராமாதபுரம் ஒரு ஏரியா. சிட்டி, செங்கல்பட்டு ஒரு ஏரியா, கோவை, நீலகிரி ஒரு ஏரியா. இந்த மூணும் வேணும்னு கையெழுத்துப் போட்டுட்டுத் தான் நான் ஸ்டில் எடுத்தேன். அப்போ இந்தப் படத்தோட வெற்றியை நான் முன்னாலயே கணிச்சேன்;. எனக்குத் தெரியும். தேவிகலாவுல போட்டா படம் 200 நாள் ஓடும்னு பார்த்தேன். ஆனா இந்தளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கல என்றார் ராமராஜன்.