Cinema History
வசூலில் கமல் படங்களை மிஞ்சிய ராமராஜன் படங்கள்.. இதுதான் காரணமாம்!
இப்போது வரை சினிமாவில் மார்க்கெட் குறையாத நடிகர்களில் கமல்ஹாசன் மிகவும் முக்கியமானவர். களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் துவங்கிய அவரது திரை பயணம் விக்ரம் திரைப்படம் வரை நீண்டு கொண்டு சென்று கொண்டுள்ளது.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரங்களாக இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக பல நடிகர்கள் வந்தனர்.
கார்த்திக்,சத்யராஜ்,விஜயகாந்த் போன்ற நடிகர்களும் அப்போதைய காலகட்டத்தில்தான் வரவேற்பை பெற்று வந்தனர் அதில் விஜயகாந்த் மிக முக்கியமாக ரஜினி கமலை விட அதிகமான படங்களில் நடித்தார் ஒரு வருடத்தில் ரஜினி,கமல் படங்களை விட விஜயகாந்தின் திரைப்படங்கள் அதிகமாக வந்தன.
அதே காலகட்டத்தில்தான் நடிகர் ராமராஜனும் அறிமுகமானார் அறிமுகமான சில படங்களிலேயே கிராமத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக ராமராஜன் மாறினார்.
மாஸ் காட்டிய ராமராஜன் படங்கள்:
பட வசூலை பொருத்தவரை கமல் படங்களுக்கே அப்பொழுது டஃப் கொடுத்து ராமராஜனின் திரைப்படங்கள் ஓடிள்ளன. இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த திருச்சி ஸ்ரீதர் பேட்டியில் கூறும்போது கமல் நடித்த புன்னகை மன்னன், இந்திரன் சந்திரன் போன்ற திரைப்படங்கள் திருச்சியில் பெரும் வெற்றியை கொடுத்தன. லாபத்தில் திரையரங்க லாபத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை அந்தப் படத்திற்கு லாபம் கிடைத்தது.
ஆனால் அதே திரைப்படம் துறையூர் போன்ற சின்ன ஊர்களில் ஓடும் போது அதற்கு 19,000லிருந்து 20,000 என்ற அளவிலேயே லாபம் கிடைத்தது. ஆனால் அதுவே ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, எங்க ஊரு காவல்காரன் போன்ற திரைப்படங்கள் திருச்சி, தஞ்சாவூர் மாதிரியான நகரங்களில் ஒரு லட்சம் அளவில்தான் லாபமீட்டி தரும்.
ஆனால் சின்ன சின்ன கிராமங்களில் கூட ஒரு லட்சத்தை தாண்டி வசூலை கொடுக்க கூடியவையாக ராமராஜன் திரைப்படங்கள் இருந்தன என அவர் கூறியுள்ளார். எனவே ராமராஜன் திரைப்படங்கள் அப்போது கமல் படங்களை விடவும் அதிக வசூல் தந்துள்ளன.
இதையும் படிங்க: சரோஜாதேவிக்கும் நாகேஷுக்கும் இடையிலே இப்படி ஒரு நட்பா?.. கேட்டாலே ஆச்சரியப்படுவீங்க!..