ஜெனிவாவில் ஜாலியா தூங்கிட்டு இருக்கேன்!.. இப்படியா சோலியை முடிப்பிங்க.. குமுறிய குத்து ரம்யா!..

நடிகை குத்து ரம்யா நலமுடன் தான் இருக்கிறார் என்றும் அவர் இறந்து விட்டதாக பரவிய செய்திகள் அனைத்தும் பொய்யான செய்திகள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னட நடிகையான குத்து ரம்யா தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: புஷ்பா 2 படத்துக்கு வந்த மெகா ஆஃபர்! – ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா?… தலையே சுத்துது!..
அர்ஜுனின் கிரி, ஜீவாவின் சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அவர் அதன் பின்னர் தமிழ் படங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் கன்னட படங்களில் நடித்து வந்த ரம்யா தனது பெயரையும் திவ்யா ஸ்பந்தனா என மாற்றிக் கொண்டார்.
அரசியலலில் ஈடுபாடு காட்டி வந்த குத்து ரம்யா கன்னட படங்களிலும் அதிகம் நடிக்காமல் ஒரு சில படங்களில் தலையை மட்டும் காட்டி வரும் நிலையில், தற்போது திடீரென குத்து ரம்யா இறந்து விட்டதாக பல பிரபல செய்தி சேனல்களே செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: பல நாள் பழக்கம்! பாடகி சொன்ன ஒரே வார்த்தை – உடனே கைவிட்ட சிவாஜி
ஆனால், அது முழுக்க பொய்யான செய்தி என்றும் தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் நடிகை குத்து ரம்யா தற்போது ஜெனிவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கே நேற்று இரவு கூட ட்வீட் போட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், எழுந்து பார்க்கும் போது ஏகப்பட்ட போன் கால் அவருக்கே வந்து, நீங்க உயிரோட தான் இருக்கீங்களா? இல்லை செத்துட்டீங்களே என நலம் விசாரிக்க, பொய்யான செய்திகளை பரப்பிய மீடியாக்களை விளாசி தள்ளியிருக்கிறார் திவ்யா ஸ்பந்தனா.