Cinema History
முதல் மரியாதை பட வாய்ப்பை மிஸ் பண்ணிய ரம்யா கிருஷ்ணன்!.. வட போச்சே!…
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் முதல் மரியாதை. இந்த படத்தில் விக் இல்லாத, மேக்கப் போடாத வித்தியாசமான சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள். அழகான கதையில், அழகான கதாபாத்திரத்தில் ராதா மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம், அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன், ராசாவே உன்ன நம்பி என அனைத்து பாடல்களும் தேன் சிந்தும் கானங்கள்தான். காலத்தையும் தாண்டி இப்போது இந்த பாடல்கள் ராஜா ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களாக இருக்கிறது.
இதையும் படிங்க: அம்மன் படத்துல நடிக்கும்போது ஓவர் கிளாமர் காட்டியும் நடித்தேன்!.. ரம்யா கிருஷ்ணன் பகீர் தகவல்!..
வழக்கமாக நடிக்கும் பாணியிலியிருந்து விலகி நடிகர் திலகம் இந்த படத்தில் சிவாஜி மிகவும் இயல்பாக நடித்திருப்பார். நடித்திருப்பார் என சொல்வதை விட பாரதிராஜா அவரை நடிக்க வைத்திருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடித்தது நடிகர் திலகத்திற்கே ஒரு வித்தியாசமான மற்றும் புதுமையான அனுபவம்தான்.
இந்த படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளாக ரஞ்சனி நடித்திருப்பார். இவருக்குதான் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ பாடல் வரும். உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர்தான் பாகுபலி படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் என்பது பலருக்கும் தெரியாது.
இதையும் படிங்க: நல்லா ஆபாசமா நடிங்க; பாடாய்படுத்திய இயக்குனரால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன்: மிஷ்கின் பகிர்ந்த சீக்ரெட்
அப்போது எந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கவில்லை. அவரும், அவரின் அம்மாவும் பாரதிராஜாவை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளனர். ரம்யா கிருஷ்ணனை பார்த்ததும் பாரதிராஜவுக்கு பிடித்துவிட்டது. அப்போது அவர் இயக்கிவந்த ஒரு கைதியின் டைரி படம் முடிவடையும் நிலையில் இருந்தது.
எனவே, அடுத்த படத்தில் கண்டிப்பாக உன்னை அறிமுகம் செய்கிறேன் என பாரதிராஜா வாக்கு கொடுத்தார். ஆனால், அதுவரை காத்திருக்க பொறுமை இல்லாத ரம்யா கிருஷ்ணன் ஒய்.ஜி.மகேந்திரன் ஹீரோவாக நடித்த ‘வெள்ளை மனசு’ படத்தில் நடித்துவிட்டார். ஏற்கனவே நடித்துவிட்டதால் அவரை முதல் மரியாதை படத்தில் பாரதிராஜா நடிக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…