என் மகளை கொல்ல முடியாமல் சாவே செத்துபோச்சு… ரஷ்மிகாவின் மைசா படத்தின் டீசர் வெளியீடு

நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘மைசா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த டீஸரில் கதாநாயகியின் தாயின் பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, கடைசியா என் மகளை கொல்ல முடியாமல் சாவே செத்துபோச்சு என்றும், உலகத்தைப்பார்தது அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள மைசா என்று கூறுவது போல் முடிகிறது. ராஷ்மிகா என்றாலே துள்ளலான மற்றும் கவர்ச்சியான காட்சிகளே நினைவ்ரும். ஆனால் இந்த படத்தில்முற்றிலும் வேறுபட்டு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ரஷ்மிகாவின் கதாபாத்திரம் இதற்கு முன் பார்த்திராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.