More
Categories: Cinema News latest news

தலைவர்கிட்ட வால் ஆட்டுனா சும்மா விடுவாரா? தொடர் தோல்வி… ரத்னகுமாரின் கேரியர் நிலை என்ன தெரியுமா?

Rathnakumar: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட் ரத்னகுமார் கொஞ்ச நாட்களாகவே வெளியில் தலைக்காட்டாமல் இருக்கும் நிலையில் தற்போது அவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார் என்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் லோகேஷின் அசோசியேட்டாக இருந்தவர் ரத்னகுமார். மேயாத மான், ஆடை, குலு குலு படங்களை இயக்கியவர். அதை தொடர்ந்து மாஸ்டர், லியோ படங்களில் பணிபுரிந்தார். லியோ படத்தின் ரிலீஸில் கூட இரண்டாம் பாகம் ரத்னகுமார் தான் இயக்கி இருப்பார் என்ற சர்ச்சை இருந்தது.

இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…

இதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் படத்தின் வெற்றிவிழாவில் ரத்னகுமார் பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. ரஜினிகாந்த் சொன்ன காக்கா – கழுகு கதையை கேலி செய்யும் விதமாக கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று பேசினார். இது பெரிய சர்ச்சையானது.

இதனால் ரஜினிகாந்த் கூட கடும் அதிருப்தியானதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சையால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர்171 படத்தில் ரத்னகுமார் இருக்க கூடாது என்று தலைவர் தரப்பில் இருந்தே கண்டிஷன் வந்தது. அதனால் படத்தில் இருந்து ரத்னகுமார் நீக்கப்பட்டார்.

அந்த சர்ச்சையை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இருந்து பெரிய பிரேக் எடுக்கப்போவதாகவும் தன்னுடைய பட வேலைகளில் இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டு இருந்தார். தலைவர்171 படத்தில் இருந்து விலகிய ரத்னகுமார், லோகேஷ் தயாரிப்பில் ஒரு படத்தினை இயக்க இருந்தார். 

இதையும் படிங்க: விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!

அப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் ரஜினிகாந்தை அவமதித்த ரத்னகுமார் இயக்கத்தில் தான் நடிக்க முடியாது என லாரன்ஸ் தரப்பு.கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் லோகேஷிடம் இருந்து மொத்தமாக விலகி தற்போது பி.எஸ்.மித்ரனுடம் இணைந்து இருக்கிறாராம்.

சர்தார்2 படத்தின் முதற்கட்ட வேலைகளில் மித்ரன் டீமுடன் ரத்னகுமாரும் இருக்கிறாராம். கிட்டத்தட்ட இப்படத்தின் டயலாக் வேலைகளை செய்வார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ரத்னகுமார் செஞ்ச வேலையில் மொத்தமும் காலி!.. கோபத்தில் லோகேஷ் என்ன பண்ணார் தெரியுமா?!..

Published by
Akhilan

Recent Posts