தலயே சும்மா இருக்கும் போது வாலுக்கு இந்த வாய் தேவையா..! பேச்சு தாங்க முடியாமல் ரத்னா எடுத்த திடீர் முடிவு..!

by Akhilan |
தலயே சும்மா இருக்கும் போது வாலுக்கு இந்த வாய் தேவையா..! பேச்சு தாங்க முடியாமல் ரத்னா எடுத்த திடீர் முடிவு..!
X

Leo movie: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில் நிறைய சர்ச்சை கருத்துகள் எழுந்த நிலையில் ரத்னா சொன்ன வார்த்தையால் தற்போது ஒரு அதிர்ச்சி முடிவை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த 19ந் தேதி திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 12 நாட்கள் வசூலே 550 கோடியை தாண்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படிங்க: ஈஸ்வரியம்மா உங்க மகனுக்கு காசு கொடுக்குறது இருக்கட்டும்… என்ன செலவு பண்ணாருனு கேட்டீங்களாக்கும்..!

இதனையடுத்து ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பிரம்மாண்டமாக வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டார் லலித். அதனையடுத்து நிகழ்ச்சி நேற்று கோலாகலாமாக நடந்து முடிந்து இருக்கிறது. இதில் விஜய் பேச்சு தொடங்கி பலரின் பேச்சுகள் இணையத்தில் வைரலாக பரவியது. அதிலும் லோகேஷ் கனகராஜின் அசோசியேட் ரத்னகுமார் தான் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர்.

அவர் நேற்று நிகழ்ச்சியில் எவ்வளவு மேலே போனாலும் பசிச்சா கீழே வந்து தானே ஆகணும் எனப் பேசி இருந்தார். இது காக்கா- கழுகு கதையில் ரஜினி கழுகு மேலே போய் கொண்டே இருக்கும் என்ற கருத்துக்கு எதிராக பார்க்கப்பட்டது. இதனால் அவரை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

இதையும் படிங்க: ரவிக்கு செம டோஸ் விட்ட முத்து… மீண்டு வந்த அண்ணாமலை..! மாமனாரை பார்த்த மீனா..!

அதில், எழுதுவதற்காக ஆஃப்லைன் செல்கிறேன். என்னுடைய அடுத்த பட அறிவிப்பு வரை நான் சோஷியல் மீடியாவில் இருந்து ப்ரேக் எடுத்து கொள்கிறேன். சீக்கிரமாக பார்ப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து அந்த ட்வீட்டிலும் அவ்வளவு தான் ரிட்டயர்மெண்ட் எனக் கலாய்த்து வருகின்றனர்.

ரத்னகுமாரின் ட்வீட்டுக்கு: https://twitter.com/MrRathna/status/1719918333888467033

Next Story