மொத்தமா கடையை சாத்திய ‘ரத்னம்’! ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா? பேயாட்டம் ஆடி விரட்டிய அரண்மனை 4
Rathnam OTT Release: ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ரத்னம். பூஜை, தாமிரபரணி போன்ற blackbuster ஹிட்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஷால் - ஹரி கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்தது அனைவரும் மத்தியிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தொடர் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையே இந்த கூட்டணி தந்தது. பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘தமிழ்’ படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் ஹரி. அந்த படத்தை தொடர்ந்து ஆறு, வேல், சிங்கம், சாமி போன்ற ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனராக மாறினார்.
இதையும் படிங்க: அந்த நடிகை மீது ஆனந்தராஜுக்கு இருந்த ஒன் சைட் லவ்!.. வில்லன் நடிகரின் லவ் ஸ்டோரி தெரியுமா?…
ஆக்சன் படங்களை கொடுப்பதில் பிஸ்தா இயக்குனராக பெயர் எடுத்தார் ஹரி. ஆனால் அவருடைய கடைசி படங்கள் ஆன சாமி 2 ,சிங்கம் 3 போன்ற படங்கள் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. அதனால் மீண்டும் தன்னுடைய ஆக்சன் திறமையை நிரூபிக்க விஷாலுடன் இணைந்தார் ஹரி. ஆனால் இந்த படமும் திரைக்கதையில் சொதப்பியதால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு வார காலத்தில் வெறும் 20 கோடியை மட்டுமே வசூலித்தது. ஆனால் கடந்த வாரம் ரிலீஸ் ஆன அரண்மனை 4 திரைப்படம் மூன்றே நாள்களில் 18 கோடி வசூலை பெற்றிருக்கிறது. அதனால் ரத்னம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் நிறுவனம் வருகிற மே 26 ஆம் தேதி இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…