விடாமுயற்சிக்கு கை கொடுத்த ரஜினி!.. தலைவர் இல்லன்னா படமே இல்ல!.. என்னப்பா சொல்றீங்க!..

by சிவா |
vidamuyarchi
X

அஜித் நடிப்பில் பல மாதங்களாக உருவாகி வரும் படம் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் இது. அஜித் படம் என்றாலே படப்பிடிப்பு துவங்கவே பல மாதம் தாமதம், படப்பிடிப்பு துவங்கினாலும் பல சிக்கல்களால் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை என பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமாகிவிட்டது.

அதோடு, ஒருபக்கம் படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியே வராது. அஜித் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து விரக்தி அடைவார்கள். ஆனால், அஜித் அதை பற்றியெல்லாம் கவலையே படமாட்டார். பைக்கை எடுத்துகொண்டு தனது நண்பர்களுடன் எங்கேயாவது சென்று ஓட்டிக்கொண்டிருப்பார். புகைப்படங்கள் மட்டுமே வெளிவரும்.

இதையும் படிங்க: முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…

இப்போது விடாமுயற்சி படமும் இந்த நிலையில்தான் இருக்கிறது. 2 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு சரியாக நடந்தது. அஜர்பைசானில் மழை, மணல் புயல் உள்ளிட்ட பல காரணங்களால் படம் தடைப்பட்டது. ஒருபக்கம் திரிஷாவின் கால்ஷீட் வீணாகி போக அவர் ‘தக் லைப்’ படத்திற்கு போய்விட்டார்.

எனவே, சில நாட்களுக்கு முன்பு படக்குழு சென்னை திரும்பியது. அஜித்துக்கு மைனர் சர்ஜரி ஒன்றும் செய்யப்பட்டது. அதன்பின் வழக்கம்போல் அஜித் பைக்கை ஓட்ட போய்விட்டார். ஒருபக்கம், இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனமும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் ரஜினியின் வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்களை தயாரிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

இதையும் படிங்க: அஜித் ஃபேனா இருந்து சொல்றேன்.. விஜய்தான் அந்த விஷயத்துல பெஸ்ட்! சீக்ரெட்டை உடைத்த சக்திவாசு

ஆனால், மே மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கவில்லை எனில் ஜீன் மாதம் நான் குட் பேட் அக்லி படத்திற்கு போய்விடுவேன் என சொல்லிவிட்டார் அஜித். இதைத்தொடர்ந்துதான் வேட்டையன் பட புதிய போஸ்டர் ஒன்றை லைக்கா வெளியிட்டிருக்கிறது. அதில் அக்டோபர் வெளியீடு என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

vettayan

தீபாவளி ரிலீஸுக்கு இப்போதே எதற்கு போஸ்டர் என யோசித்தால் இதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் தெரிய வந்திருக்கிறது. இப்படி போஸ்ட் போட்டால் படத்தின் வியாபாரம் துவங்கும். அந்த பணத்தை எடுத்துதான் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்க முடியும் என்கிற நிலையில் இருக்கிறது லைக்கா. மொத்தத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை டேக் ஆப் பண்ண வேட்டையன் படமே உதவியிருக்கிறது.

Next Story