latest news
சினிமாவ விட பிக்பாஸில் அதிக சம்பளம்! கமல் இத விட்டு போறாருனா ஏன் தெரியுமா?
கடந்த இரண்டு நாட்களாக கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காதது பற்றி சோசியல் மீடியாவில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அவர் ஏன் இந்த திடீர் முடிவை எடுத்தார் என்றும் இதற்கு பின்னணியில் என்ன காரணம் என்றும் பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
ஆனால் அவர் வெளியிட்ட அறிக்கையில் தன்னுடைய சினிமா கமிட்மெண்ட்ஸ் மற்றும் மற்ற சினிமா சம்பந்தப்பட்ட வேலைகள் அதிகமாக இருப்பதனால் இனி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தன்னால் தொடர இயலாது என்றும் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றி என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் என்னதான் ஒரு அறிக்கை கமல் வெளியிட்டாலும் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? இது காரணம் அது காரணம் என ஏதேதோ காரணங்களை சொல்லிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது பற்றி பிரபல திரை விமர்சகரும் மருத்தவருமான காந்தராஜ் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதே ஒரு யூஸ்லெஸ் நிகழ்ச்சி தான் .அதில் என்ன இருக்கு என தெரியவில்லை. அதற்கு இத்தனை ரசிகர்களா என்று நினைக்கும் போது மடத்தனமாக இருக்கிறது. மேலும் கமலுக்கு இருக்கிற திறமை புத்திசாலித்தனத்திற்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்பதே இல்லை.
இந்த நிகழ்ச்சியை யார் வேண்டுமானாலும் தொகுத்து வழங்கலாம். ஆனால் கமல் இந்த நிகழ்ச்சியில் இருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் அவர் இனிமேல் இருக்க மாட்டார் என சொன்னது எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் சினிமா.
ஒரு பக்கம் அரசியல். இன்னொரு பக்கம் டிவி நிகழ்ச்சி என ஒரே நேரத்தில் இத்தனையையும் தன் தலையில் போட்டுக் கொண்டு எந்த கலைஞனாலும் கொண்டு செலுத்த முடியாது .அதன் காரணமாக கூட அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு போயிருக்கலாம். என்று காந்தராஜ் கூறினார்.
இதைக் குறிக்கீட்டு பேசிய தொகுப்பாளர் சினிமாவை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு அதிக சம்பளம் எனக் கூறுகிறார்கள். அதுவும் 200 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு போக வேண்டும் என்ற ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த காந்தராஜ் ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் கமலுக்கு திருப்தி இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஏனெனில் சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு கலைஞன் நடிக்கும் போது தயாரிப்பாளர் இயக்குனர் அவர்களுக்கு ஓகே என்றாலும் நடிக்கும் போது தனக்கு திருப்பி இல்லை என்றால் கட் கட் என்ற சொல்லி மீண்டும் நடிக்கலாம்.