நடிகைகளுடன் தொடர்பு?!.. மாமியாருடன் மனக்கசப்பு!.. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிந்தது இதனால்தானா?!..
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜிவி பிரகாஷ். நல்ல இசையமைப்பாளர் என பெயரெடுத்த ஜிவி பிரகாஷுக்கு எப்போது சினிமாவில் நடிக்கும் ஆசை வந்ததோ அப்போது அவரின் குடும்பத்தில் பிரச்சனையும் துவங்கியது. தனது பள்ளி தோழி சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ம் வருடம் திருமணம் செய்து கொண்டார் ஜிவி பிரகாஷ்.
7 வருடங்கள் கழித்து இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. ஜிவி பிரகாஷ் இஸ்லாமிய குடும்ப பின்னணி கொண்டவர். சைந்தவி பிராமன பெண். சைந்தவியின் அம்மாவும் அவர்களோடு தங்கி இருந்தார். அவர் தீவிர இந்துத்துவா கொள்கைகளை கடைபிடிப்பவர். இது ஜிவி பிரகாஷுக்கு பிடிக்காது.
இதையும் படிங்க: வாய் இருக்குங்கிறதுக்காக இப்படியெல்லாமா பேசுவீங்க? திடீரென ஜிவி போட்ட பதிவு.. ரொம்ப நொந்துட்டாரே
எனவேதான், தான் நடிக்கும் படங்களிலும், சமுகவலைத்தளங்களிலும் அதற்கு எதிரான கருத்துக்களையும், கம்யூனிச சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார் ஜிவி பிரகாஷ் என சொல்லப்படுகிறது. ஜிவி பிரகாஷின் மாமியார் பாஜகவோடு தன்னை இணைத்துகொண்டவர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
ஒருபக்கம், பல திரைப்படங்களிலும் கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார் ஜிவி பிரகாஷ். அதோடு, அதில் சிலருடன் அவர் நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படுகிறது. இதில், சைந்தவிக்கும் அவருக்கும் பிரச்சனை வந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தை பிறந்தபின் பிரகாஷின் நடவடிக்கைகள் மாறிப்போனதகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம், சைந்தவி தைராய்டு பிரச்சனையில் உடல் எடை கூடிப்போய் அதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஜிவி பிரகாஷ் ஆர்வம் வேறுபக்கம் திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது இருவருக்கும் பிடிக்காமல் போக ஒரு வருடத்திற்கு முன்பே விவாகரத்து பெறுவது என இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…
ஆனால், நண்பர்களின் அறிவுரை மற்றும் குழந்தைக்காக முடிவை தள்ளிப்போட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் ‘எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். இது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆலோசித்து பரஸ்பரம் பேசியே இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளோம். தனிமனிதர்களின் சொந்த உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்’ என பொங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.