Connect with us
vinayak

Cinema News

விஜயகாந்த் படத்தில் இருந்து சுட்டதுதான் ஜெயிலர் வில்லன்!. அட இது தெரியாம போச்சே!…

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்த ரஜினிக்கு இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அவரே எதிர்பார்த்திராத அளவுக்கு இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினிக்கு ஆதரவு என்கிற மனநிலையில் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டரில் போய் பார்க்க வசூலோ ரூ.600 கோடியை தாண்டியது.

பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெறவே அப்படத்தின் இயக்குனர் நெல்சன் சமூகவலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். எனவே, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில்தான் அவருக்கு ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயிலர் பட ஹிட் அவரை முன்னணி இயக்குனராக மாற்றியிருக்கிறது.

இதையும் படிங்க: கூட இருந்தே குழி பறிக்கும் புஸ்ஸீ ஆனந்த்! மிஷ்கின் விவகாரத்தில் பொம்மையாக மாறிய விஜய்

ஜெயிலர் படத்தில் வழக்கமான ரஜினியை பார்க்க முடியவில்லை. நெல்சன் பட ஹீரோவையே பார்க்க முடிந்தது. அதேநேரம், ரஜினிக்கு தேவையான ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளை வைத்து அசத்தியிருந்தார். இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், மகனாக வசந்த் ரவி நடிக்க, மோகன்லால் மற்றும் சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர்.

இதனால்தான் ஜெயிலர் படம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிலும் நல்ல வசூலை பெற்றது. அதேபோல், இப்படத்தின் வில்லனாக மலையாள நடிகர் வினாயக் நடித்திருந்தார். ரசிகர்களுக்கு இவரின் மலையாளம் கலந்த தமிழும், உடல்மொழியும் புதியதாக இருந்தது. இவர் பல வருடங்களுக்கு முன்பே விஷால் நடித்து திமிறு படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் வினாயக் தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. ஆனால், மலையாளத்தில் அசத்தலான வேடங்களில் நடித்து வந்தார். பஹத் பாசில் நடிப்பில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற Trance படத்தில் கூட தனது நடிப்பால் அசத்தியிருப்பார். இந்நிலையில், ‘ஜெயிலர் படத்தில் வினாயக்கை நடிக்க வேண்டும் என ஏன் தோன்றியது?’ என நெல்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: ரகுவரனை வில்லனாதான் பார்த்திருப்பீங்க! இளையராஜாவையே மிஞ்சிய ரகுவரனை பற்றி தெரியுமா?

அதற்கு ‘ஜெயிலர் படத்திற்கு வேறு மாநில வில்லன் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தோம். இப்படத்தில் வில்லன் பேசும் வசனங்களை கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் மாற்றி அதன் உச்சரிப்பை பார்த்த போது மலையாள நடிகர் நடித்தால் சரியாக இருக்கும் என தோன்றியது. விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தில் வில்லனாக மலையாள நடிகர் திலகன் நடித்திருப்பார். மலையாளம் கலந்த அவரின் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனவே, மலையாளத்தில் இருந்து ஒரு நடிகரை வில்லனாக்க நினைத்தோம். வினாயக்கின் படங்களை நான் பார்த்தது இல்லை. அவரின் பேட்டிகளை பார்த்தேன். அவரின் உடல்மொழி எனக்கு பிடித்திருந்தது. ஜெயிலர் படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தேன்’ என நெல்சன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top