சரக்கே அடிக்கக் கூடாது!.. கங்கை அமரன் முடிவெடுக்க காரணமாக இருந்த அந்த சம்பவம்!..

by சிவா |   ( Updated:2024-04-21 01:50:34  )
gangai
X

பொதுவாக கலைஞர்கள் என வந்துவிட்டாலே அதில் பெரும்பாலானோருக்கு மதுப்பழக்கம் இருக்கும். சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் ரசிகர்களின் பொழுதுபோக்காக இருந்தது. அப்போதே பல நாடக நடிகர்களுக்கும் மதுப்பழக்கம் இருந்தது. மதுப்பழக்கதையும், கலைஞர்களையும் பிரிக்கவே முடியாது என்றே சொல்வார்கள்.

ஆனால், அதேநேரம், நாடகம் மற்றும் சினிமாவில் இருந்தும் மதுவை கடைசி வரை தொடாத கலைஞர்களும் இருக்கவே செய்கிறார்கள். சிவாஜிக்கு புகை மற்றும் மதுப்பழக்கம் என இரண்டும் உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு இது இரண்டு பழக்கமும் கிடையாது. இப்படி திரையுலகில் பல உதாரணங்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: கங்கை அமரனை யாருன்னே தெரியாதுன்னு சொன்ன கனகா… நடந்தது என்ன?..

நடிகர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் என பலருக்கும் மதுப்பழக்கம் உண்டு. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால் உடனே தயாரிப்பாளரோ, இயக்குனரோ அப்படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் தனது நண்பர்கள் என எல்லோருக்கும் ஒரு பார்ட்டி கொடுப்பார். அதில் பலரும் மது அருந்துவார்கள். சில சமயம் அங்கேயே சில பிரச்சனைகளும் நடந்துவிடும்.

gangai2

gangai2

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். சினிமாவில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் அண்ணன் ராஜாவுடன் சென்னை வந்தவர். இளையராஜாவின் இசையில் பல பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், பல பாடல்களை பாடியும் இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித்தின் சூப்பர்ஹிட் பாடல்… ஹீரோக்கு கங்கை அமரன்… ஹீரோயினுக்கு வாலி.. என்னங்க இப்படி?

ஒருகட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் 2 தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது. இவருக்கு மதுப்பழக்கம் இல்லை. அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. சென்னை வந்த புதிதில் சிலரிடம் இசை கற்று வந்தார் இளையராஜா. அவரின் குருவுக்கு மதுப்பழக்கம் உண்டாம்.

மாலை ஆனால் மது அருந்துவாராம். சில சமயம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வேட்டி எல்லாம் அவுந்துவிடுமாம். அவரை தூக்கி அவரின் அறையில் படுக்க வைக்கும் வேலை கங்கை அமரனுடையதாம். அப்போதே வாழ்வில் மதுவை தொடவே கூடாது என முடிவெடுத்தாராம் கங்கை அமரன். இப்போது வரை அதை கடைப்பிடித்தும் வருகிறார்.

Next Story