Cinema News
சூர்யா – சுதாகொங்கரா ‘புறநானூறு’ படம் டிராப் ஆனதுக்கு காரணம் இதுதானாம்!.. அடக்கடவுளே!…
தமிழ் திரையுலகில் ஒரு புது படத்தை துவங்கி சில நாட்களிலேயே அந்த படத்திலிருந்து விலகுவதை நடிகர் சூர்யா பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். காக்க காக்க எனும் ஆக்ஷன் படம் மூலம் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய கவுதம் மேனனின் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்கிற படத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால், கதையில் திருப்தி இல்லாமல் அப்படத்திலிருந்து விலகினார். இப்போது அதில் விக்ரம் நடித்து முடித்திருக்கிறார். நந்தா, பிதாமகன் படங்கள் மூலம் தன்னை வளர்த்துவிட்ட பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தை துவங்கினார் சூர்யா. ஆனால், அப்படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட அவருக்கு பதில் அருண்விஜய் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..
சூர்யாவை வைத்து சூரரைப்போற்று எனும் சிறந்த படத்தை கொடுத்தவர் சுதா கொங்கரா. இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படமும் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான். சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யாவுக்கு ஜெய்பீம் என்கிற நல்ல படமும் கிடைத்தது.
இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைந்து ‘புறநானூறு’ என்கிற படத்திலும் சூர்யா நடிக்கவிருந்தார். ஆனால், இந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான காட்சிகள் இருக்கிறது. அப்போது மத்தியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. எனவே ஆண்ட்டி காங்கிரஸ் போன்ற இமேஜ் வரும் என யோசிக்கிறாரம் சூர்யா. அதோடு, வேறு சில காட்சிகளையும் சூர்யா மாற்ற சொன்னதாகவும், அதற்கு சுதாகொங்கரா மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தம்பி கண்டிப்பா ஜெயிக்கணும்!.. விஜயின் அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி!.. இது செம டிவிஸ்ட்!..
ஒருபக்கம், இப்படத்தின் பட்ஜெட் எப்படியும் ரூ.100 கோடியை நெருங்கும். ஆனால், ஓடிடி நிறுவனங்கள் இப்போது புதிய படங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. அதோடு, 2025ம் வருடத்தில் ஓடிடியில் ஒளிபரப்பாகும் படங்களை தேர்ந்தெடுத்து முடித்தும் விட்டன. எனவே, இப்படம் ஓடிடியில் வியாபாரமும் ஆகாது. எனவே, தியேட்டர் வசூலை மட்டுமே நம்பியும் இப்படத்தை தயாரிக்க முடியாது.
இதுபோன்ற காரணங்களால்தான் இப்படத்தை சூர்யா டிராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், எதிர்காலத்தில் சூர்யாவின் முடிவு மாறலாம் எனவும் சொல்லப்படுகிறது.