Cinema News
ஒதுக்கி வைத்த வடிவேலு.. தனி ரூட்டை பிடித்து உயரம் தொட்ட ரம்பி ரமையா!.. இவ்வளவு நடந்திருக்கா?!..
Actor thambi ramaiah: தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி செய்த பல நடிகர்களில் தம்பி ராமைய்யா முக்கியமானவர். வடிவேலு – சிங்கமுத்து கூட்டணி எப்படி பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தார்களோ அதற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை வடிவேலு – தம்பி ராமையா கூட்டணி.
இருவரும் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். ஆறு, சில்லுன்னு ஒரு காதல், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட பல படங்களில் இருவரும் சேர்ந்து செய்த காமெடியை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஆனால், திடீரென வடிவேலுவுடன் இணைந்து நடிப்பதை தம்பி ராமைய்யா நிறுத்திக்கொண்டார்.
இதையும் படிங்க: ரசிகர்களை சிரிக்க வைத்த அந்த வடிவேல் காமெடி ஒரு நிஜ சம்பவமா?!.. அட தெரியாம போச்சே…
சிங்கமுத்து, அல்வா வாசு, பாவா லட்சுமணன், முத்துக்காளை, போண்டா மணி என பலரும் வடிவேலுவுடன் இணைந்து நடித்தனர். வடிவேலுவுக்கு ஒரு குணம் உண்டு. தனக்கு பிடிக்காதது போல் நடந்து கொண்டால் அவரை ஒதுக்கி வைத்துவிடுவார். அதேபோல், அவருக்கு பிடிக்காத அல்லது போட்டி நடிகருடன் சேர்ந்து நடித்தாலும் அவரை ஒதுக்கி வைத்துவிடுவார்.
தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்கள் தன்னை தாண்டி நடித்து விடக்கூடாது.. தன்னை தாண்டி போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அவரை மட்டுமே நம்பி அவரின் காலடியில் இருக்க வேண்டும். அதேபோல், புதிதாக எந்த நடிகரையும் வளர்த்துவிடக்கூடாது எனவும் நினைப்பார். அதனால்தான் வளர்ந்து வந்த புதிய சின்ன சின்ன காமெடி நடிகர்களை அருகிலேயே அவர் சேர்க்கவில்லை.
இதையும் படிங்க: என்னை திட்டுனுவனுக்கெல்லாம் இருக்கு!. ரெடியா இருங்க!.. யாருன்னு காட்டுறேன்!.. வடிவேல் பேட்டி!…
தம்பி ராமையா காமெடி நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு கதாசிரியர் மற்றும் இயக்குனரும் கூட. வடிவேலுவை வைத்து தம்பி ராமையா இயக்கி படம்தான் ‘இந்திரலோகத்தில் அழகப்பன்’. இந்த படம் உருவானபோது நீளம் கருதி வடிவேலு நடித்த சில காட்சிகளை நீக்க சொன்னார் தயாரிப்பாளர். வடிவேலுவுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், தயாரிப்பாளர் கேட்டதுபோல் காட்சிகளை ட்ரிம் செய்து கொடுத்துவிட்டார் தம்பி ராமையா. இதனால் அவர் மீது கோபமடைந்த வடிவேலு அவருடன் பேசுவதையும், நடிப்பதையும் நிறுத்திக்கொண்டார்.
ஆனால், தம்பி ராமையா இதற்கெல்லாம் அஞ்சவில்லை. அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட. மைனா படத்தில் அசத்தலாக நடித்து தேசிய விருதையே பெற்றார். மேலும், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் பின்னி பெடலெடுப்பார். கும்கி படம் பார்த்தால் அது தெரியும். வடிவேல் 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தபோது கூட தம்பி ராமையா பிஸியான நடிகராக இருந்தார். அவரை எதுவும் தடுக்கவில்லை. தனக்கென ஒரு தனி பாணியையும், ரூட்டையும் பிடித்து ஒரு வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தம்பி ராமையா.
இதையும் படிங்க: வடிவேல் நடித்த அந்த ஹிட் காமெடி என் அம்மா சொன்னது!.. காலம் கடந்து உண்மையை சொன்ன மாரிமுத்து !..