Connect with us

Review

படத்தை பார்த்துட்டு லவ் பண்ணலாமா? வேணாமான்னு முடிவு பண்ணுங்க!.. லவ்வர் விமர்சனம்!..

அருண் மற்றும் திவ்யாவின் டாக்ஸிக் காதல் கதை தான் இந்த லவ்வர். அருணாக அப்படியே வாழ்ந்திருக்கிறார் மணிகண்டன். ஐடியில் வேலை செய்யும் திவ்யாவாக ஸ்ரீகெளரி பிரியா ஸ்கோர் செய்கிறார்.

காதலில் நம்பிக்கை எந்தளவுக்கு முக்கியம். காதலர்களுக்குள் நடக்கும் பிரச்சனை என்ன? பிடித்துப் போன காதலன் சரக்கடிச்சிட்டு, தன்னை போட்டு திட்டுவதே பொழப்பாக கொண்டிருந்தாலும் அவனை விட்டு விடுவேன் என மிரட்டினாலும், விட்டு விடாமல் தவிக்கும் காட்சிகளும், நண்பனாக இடையே வந்து சிக்கிக் கொள்ளும் கண்ணா ரவியின் கதாபாத்திரம் மணிகண்டனின் அம்மா மற்றும் அப்பாவின் கதாபாத்திரங்கள் என அனைத்துமே இயல்பாகவும் யதார்த்தமாகவும் உருவாக்கப்பட்டு இருப்பதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடிவாங்கும் காட்சியில் நான் நடிப்பதா? வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த அந்த நடிகர் யார் தெரியுமா?

ஆரம்பத்தில் கடற்கரையில் தனது நண்பர்களிடம் தனது காதலன் பற்றியும் காதல் பற்றியும் சந்தோஷமாக வர்ணித்து சொல்லி வரும் ஸ்ரீகெளரி பிரியா திடீரென காதலன் அருணிடம் இருந்து போன் கால் வர அந்த சந்தோஷமே இல்லாதவளாக போனை எடுத்து பேசுவதும், எங்கே இருக்கே என கேட்க அவள்பொய் சொல்வதும் திவ்யாவின் தோழி கடற்கரையில் வைத்த வாட்ஸப் ஸ்டேட்டஸை பார்த்து விட்டு திட்டுவது என தொடங்கும் படத்தில் பல இடங்களில் இதே போன்ற வித்தியாசமான சண்டைகள் ரிப்பீட் ஆகிறது.

காதலிக்கும் வரை காதலிக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அதன் பின்னர் அவளை மதிக்காமல் விடுவதும், திருமணம் வரை பெண் தேடி அலைவதும் திருமணத்திற்கு பிறகு மனைவியை அடிமையாய் நடத்துவதும் என்கிற ஆணாதிக்க புத்தி எவ்ளோ கேவலமா இருக்கு பாருங்க என உணர்த்தும் கண்ணாடியாக இந்த லவ்வர் படம் உள்ளது.

இதையும் படிங்க: மொய்தீன் பாய் மிரட்டினாரா?.. உருட்டினாரா?.. லால் சலாம் லாபம் அள்ளுமா?.. விமர்சனம் இதோ!..

லவ்வர் – லவ் பண்லாமா? வேணாமா?

ரேட்டிங் – 3.75

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top